தஞ்சையில் கமலஹாசனுக்கு ஏற்பட்ட சோதனை! மநீம தொண்டர்கள் அதிர்ச்சி!

0
76

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தாழ்வாகவும் அதேபோல தேர்தல் ஆணையம் சார்பாகவும் தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதேபோல ஒவ்வொரு வேட்பாளர்களும் தனித்தனியாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் காலையில் முதலமைச்சர், மாலையில் எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழகத்திலே அனைத்து பகுதிகளிலுமே நாள்தோறும் புதுப்புது பரபரப்பு தொற்றிக்கொண்டு விடுகிறது. இதனால் தமிழக மக்கள் மிகவும் பரபரப்பாகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.முதல்வராக இருந்தாலும் சரி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி ஒரு முறையாவது அவர்களை அருகில் பார்த்து விட மாட்டோமா? அவரிடம் கைகொடுத்து வாழ்த்துக்கள் பெற்று விட மாட்டோமா? என்ற ஏக்கத்தில் தமிழகத்திலேயே பாமரமக்கள் ஏராளமானோர் இருந்தார்கள்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி, அல்லது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும் சரி, பிரச்சாரத்தின்போது மக்களிடையே சகஜமாக பேசுவது, கை கொடுப்பது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகிறார்கள். அதன் காரணமாக தமிழக மக்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சி இருந்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழகம் முழுவதும் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடா போன்றவற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பறக்கும் படை மூலமாக தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது.அந்த விதத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். மார்ச் மாதம் 22ஆம் தேதி நேற்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அவர் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் கீழ்வேளூர் எனும் 2 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக நாகப்பட்டினத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை முன்னெடுத்த கமல்ஹாசன், அங்கு இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில், நேற்று மாலை தஞ்சாவூர் ரயிலடியில் தன்னுடைய பிரச்சாரத்தில் பங்கேற்று விட்டு அதன் பிறகு காரில் திருச்சிக்கு புறப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போய்க் கொண்டிருந்த சமயத்தில் நடிகர் கமலஹாசனின் காரை தேர்தல் பறக்கும் படையினர் இடைமறித்து இருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு அது இரண்டு சக்கர வாகனமோ, அல்லது நான்கு சக்கர வாகனமோ எதுவாக இருந்தாலும் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேலான கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் எடுத்துச்செல்லப்பட்டால் அதனை கைப்பற்றி விசாரணை செய்வதற்கு தேர்தல் பறக்கும் படையினருக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், கமல்ஹாசனின் பிரச்சார வாகனத்தில் நுழைந்த துணை ராணுவ படையினர் அந்த வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர் சோதனை முடிவுற்ற பின்னர் சில நிமிடங்களில் கமலஹாசனை காரைவிட்டு இறங்கி இருக்கிறார்கள்.

சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில பொருளாளர் சந்திரசேகரின் திருப்பூரில் இருக்கக்கூடிய அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 11.5 கோடி ரூபாயை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த நிலையில், நடிகர் கமலஹாசனின் பிரச்சார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். இது பரபரப்பை உண்டாக்கி இருப்பதாக கூறுகிறார்கள்.