உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மேயரா? திமுகவின் அடுத்த அதிரடி திட்டம்
காலங்காலமாக திமுகவை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களே ஆக்கிரமித்து இருப்பதால் அதனை தொடர்ந்து ‘வாரிசு கட்சி’ என்று விமர்சித்து வரும் சூழ்நிலையில் மீண்டும் அதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் வாரிசான உதயநிதி ஸ்டாலிக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவியை வழங்கியுள்ளார். இதை கண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்களுக்குள் புலம்பி கொண்டாலும் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் பெரும்பாலான திமுக நிர்வாகிகள் இனி ஸ்டாலினுக்கு அடுத்து அவரது வாரிசு உதயநிதி ஸ்டாலின் தான் என உறுதி செய்து கொண்டு அவர்களுடைய தற்போதைய பதவியை காப்பாற்றி கொள்ளவும்,முடிந்தால் உதயநிதி ஸ்டாலினை ஆதரிப்பதன் மூலம் மேலும் எதாவது உயர் பதவிகளை பெறவும் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவின் மீது வாரிசு கட்சி என்று விமர்சனம் செய்தாலும் கூட, அக்கட்சியில் ஸ்டாலினின் வளர்ச்சியானது படிப்படியாக வளர்வது போல மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக என்று நகர்ந்து மக்களை நம்ப வைத்து இன்று அக்கட்சியின் தலைவராகியிருக்கிறார். அடுத்து திமுக சார்பில் தமிழக முதல்வராகும் முயற்சியிலும் இருக்கிறார். இவ்வாறு தன்னைப் போலவே தனது வாரிசு உதயநிதி ஸ்டாலினையும் தான் ஆரம்பத்தில் அரசியல் வாழ்க்கையை தொடங்கியது போல சென்னையின் மேயராக்கிட வேண்டும் எனும் ஆசை ஸ்டாலினுக்கு வந்திருக்கிறது என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
இதற்காக தான் சமீபத்தில் அவர் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பதவியில் அமர வைக்கபட்டார். இந்த நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி என இரு தொகுதி இடைத்தேர்தல்களில் ஏதோ ஒரு தொகுதியில் அவரை போட்டியிட வைக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அவருக்கு ஆதரவாக பேசி பார்த்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின் தன்னைப் போலவே தன் மகனையும் மேயர் பதவியில் அமர வைப்பதே அவரது விருப்பமாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் தான் விரைவில் அறிவிக்கப்படவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இதை செயல்படுத்த முயற்சிக்கிறார் என்றும் கூறபடுகிறது. அதில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு தன்னுடைய வாரிசு உதயநிதி ஸ்டாலினை போட்டியிட வைக்கும் முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறாராம். இதைப்பற்றி உதயநிதி ஸ்டாலினிடமும் சொல்லப்பட்டு அவரும் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டார் என்கிறார்கள். ஒரு காலத்தில் அரசியலும் வேண்டாம் பதவியும் வேண்டாம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அப்படி வேட்பாளராகும் பட்சத்தில், தி.மு.க. இளைஞரணியின் ஒட்டு மொத்த நிர்வாகிகளும் சென்னையில் அவருக்காக பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.