அதிமுகவுடனான பாமக கூட்டணி தொடருமா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

0
87

அதிமுகவுடனான பாமக கூட்டணி தொடருமா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தற்போதுள்ள அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற இருப்பதாக பிரபல நாளிதழில் வெளியான செய்தியை, ‘இது உண்மை கலப்பற்ற பொய்ச் செய்தி’ என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக சேர்ந்து திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவிற்கு 7 மக்களவைத் தொகுதிகளையும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் அதிமுக வழங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாமல் படுதோல்வியைச் அடைந்த போதும், தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக தலைமையிலான ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து நீடிக்க உதவிய இந்த சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வட மாவட்டங்களில் அதிமுக வெல்வதற்கு பாமகவின் வாக்குகளும் பெரிதும் உதவியது.

நாடாளுமன்ற தேர்தலையடுத்து அதிமுகவில் அந்த 3 மாநிலங்களவை உறுப்பினருக்கான இடங்களைப் பிடிக்க அக்கட்சிக்குள்ளேயே போட்டிகள் இருந்ததை அனைவரும் அறிவர்.இந்நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி பாமகவிற்கு வழங்கிய அந்த 1 இடத்தை உறுதி செய்தது அதிமுக தலைமை. அந்த வகையில் அன்புமணி ராமதாசுக்கு மாநிலங்களவையில் ஓரிடத்தை அதிமுக வழங்கியது. இதனால், மகிழ்ச்சியடைந்த பாமக, எதிர்வரும் தேர்தல்களிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தொடர்ந்து கூறி வந்தது.

இந்நிலையில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வட தமிழகத்தில் 40 சதவீத இடங்களை பாமக கேட்க முடிவு செய்திருப்பதாகவும், அதில் ஒரு சதவீதம் குறைந்தாலும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாமக தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.

நாளிதழில் இந்தச் செய்தி வெளியான உடனேயே தவறான அந்தச் செய்தியை பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “ஊடகங்களுக்கு அறம் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், ஊடக அறம் என்பதன் அடிப்படைகூட அந்த நாளிதழுக்கு இல்லை என்பதையே இந்த செய்தி காட்டுகிறது. உள்ளாட்சி தேர்தலில் உடையுது கூட்டணி, தனித்து போட்டியிட தயாராகிறது பா.ம.க. என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி அந்த நாளிதழின் தரத்தைக் காட்டுகிறது.  ஒரு செய்தி வெளியிடும்போது அதில் ஒரு விழுக்காடாவது உண்மை இருக்க வேண்டும். இது உண்மை கலப்பற்ற பொய் செய்தி!” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியை விட்டு பாமக செல்ல இருப்பதாக வெளியான இந்த செய்திக்கு மருத்துவர் ராமதாஸ் உடனடியாக மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்ததன் மூலமாக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடனான பாமகவின் இந்த கூட்டணி தொடரும் என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K