மே3ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவில் ஐக்கியம்? பகீர் கிளப்பும் திமுக முக்கிய புள்ளி!

0
118
Jayakumar
Jayakumar

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 131 தொகுதிகளில் அதிமுக – திமுக நேருக்கு நேர் மோதுகிறது. இந்த முறை ராயபுரம் தொகுதியில் அதிமுக – திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காரணம் 991, 2001, 2006, 2011, 2016 என தொடர்ந்து 5 முறை ராயபுரம் தொகுதியில் வெற்றி வாகை சூடிய ஜெயக்குமார், 6வது முறையாக இந்த சட்டமன்ற தேர்தலிலும் ராயபுரத்தில் களமிறங்கியுள்ளார்.

DMK

25 வருடங்களாக எம்.எல்.ஏவாக இருக்கும் ஜெயக்குமாரை எதிர்த்து திமுக வேட்பாளர் ‘ஐ ட்ரீம்ஸ்’ மூர்த்தி போட்டியிடுகிறார். 25 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் ஜெயக்குமார் மக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்து வருகிறார். மீன்வளத்துறை, சட்டத்துறை அமைச்சர் பதவிகளில் எல்லாம் இருந்த ஜெயக்குமார், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்குப் பொறுப்பாளராக இருந்தார். ஆனால் ஒரு மீனவருக்கு அவர் அரசு வேலை வாங்கித் தந்தாரா? இத்தனை ஆண்டுகளில் அப்படி ஒரு உதாரணத்தை கூட அவரால் சொல்ல முடியாது. அவர் நினைத்திருந்தால்டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 தேர்வு எழுத இந்தத் தொகுதியில் ஒரு பயிற்சி மையம் அமைத்திருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை என சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று சூரிய நாராயண தெருவில் உள்ள தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மோடிக்கு அடிமையாக இருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியையாவது கட்டியிருக்கலாமே? 85 கிராமங்களை அழிக்கும் அதானி திட்டத்தை எதிர்க்க துணிவு இருக்கிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

தேர்தல் முடிவு வெளியான மறுநாளே அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவில் இணைய போகிறார். ராயபுரத்தில் உள்ள மக்கள், தொண்டர்களை நட்டாற்றில் விடப்போகிறார் என பகீர் கிளப்பியுள்ளார். திமுக வேட்பாளரின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் கட்சி தாவும் விஷயங்கள் அரங்கேறிவருவரும் நிலையில், மக்களை திசை திருப்பும் விதமாக திமுக வேட்பாளர் பேசியுள்ள பேச்சு அதிமுக தலைமையான இபிஎஸ் – ஒபிஎஸ் வரை அதிர்ச்சி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleஅதிமுக மூத்த அமைச்சரின் வாக்கு சேகரிப்பு டெக்னிக்! வைரல் வீடியோ!
Next articleஅதிமுகவில் இணைகிறாரா சசிகலா? எடப்பாடி ஓபிஎஸ் ஆலோசனையால் பரபரப்பு!