அதிமுக மூத்த அமைச்சரின் வாக்கு சேகரிப்பு டெக்னிக்! வைரல் வீடியோ!

0
100
ADMK
ADMK

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது. தொகுதி மக்களை கவர வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் தினுசு, தினுசாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக அதிமுக- திமுக இடையே மட்டுமே நிலவும் இருமுனை போட்டி, இந்த முறை அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என ஐந்துமுனை போட்டியாக மாறியுள்ளதால் வாக்கு சேகரிப்பிலும் பல ருசிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

துணி துவைத்து கொடுப்பது, பிரைடு ரைஸ் செய்வது, தோசை சுடுவது, காலில் விழுவது என வித்தியாசமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய ராயபுரம் தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 1991, 2001, 2006, 2011, 2016 என தொடர்ந்து 5 முறை ராயபுரம் தொகுதியில் வெற்றி வாகை சூடிய ஜெயக்குமார், 6வது முறையாக இந்த சட்டமன்ற தேர்தலிலும் ராயபுரத்தில் களமிறங்கியுள்ளார்.

25 வருடங்களாக ராயபுரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டி வைத்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், திமுக வேட்பாளர் ஐ‌‌ட்ரீம் மூர்த்தி இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தொகுதிக்கு வாக்குசேகரிக்க செல்லும் வேட்பாளர் ஜெயக்குமார் தினமும் தன்னுடைய தொகுதி மக்களை கவரும் விதமாக பல விஷயங்களைசெய்து வருகிறார். சமீபத்தில் அப்பகுதி இளைஞர்களுடன் களத்தில் இறங்கி அமைச்சர் ஜெயக்குமார் கபடி விளையாடிய வீடியோ வெளியாகி வைரலானது.

நேற்று ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஜெயக்குமார் எம்.ஜி.ஆரின் ‘வெற்றி மீது வெற்றி வந்து’ என்ற பாடலை பாடிக் காண்பித்து வாக்காளர்களை குஷியாக்கினார். தற்போது அந்தவீடியோ வைரலாகி வருகிறது. இதோ…

author avatar
CineDesk