ஆண்களே உஷார்..! முதலிரவில் கணவனை இரும்பு ராடால் தாக்கிய மனைவி

0
333

முதலிரவில் கணவனை இரும்பு ராடால் மனைவி தாக்கி விட்டு மனைவி தப்பி ஓடிய சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்திரப்பிரதே மாநிலத்தில் அண்மை காலமாக நடந்து வரும் வன்முறைகளும், அராஜகமும் கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும். ரேசர் பிளாடால் நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த சம்பவமும், சந்தேகத்தின் பேரில் மனைவியின் பிறப்புறுப்பை அலுமிய நூலால் தைத்த சம்பவம் கேட்போரை அச்சமடைய செய்தது என்றே கூறலாம். இந்த நிலையில் வேறொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அதே உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் ஹரித்வாரில் வசிக்கும் பெண்ணிற்கும், பிஜ்னோரில் வசிக்கும் ஆணிற்கு கடந்த 15ம் தேதி கோவில் ஒன்றில் வைத்து திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு மணமகன் வீட்டிற்கு மணமகள் வந்துள்ளார். இருவரையும் ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியோடு மணமகன் வீட்டார் வரவேற்றுள்ளனர். இருவரும் இல்லறத்தை மகிழ்வோடு தொடங்க குடும்பத்தார் ஏற்பாடுகள் செய்தனர். அன்றிரவு தான் மணமகனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி..!

முதலிரவு அறையில் மணமகளுக்காக காத்திருந்த மணமகனுக்கு ரத்தக்காயங்களை மணமகள் பரிசாக அளித்துள்ளார். அறைக்குள் நுழைந்ததும் சாதாரணமாக இருந்த மணமகள் திடீரென ஒரு இரும்பு ராடை எடுத்து மணமகனை பலமாக தாக்கியுள்ளார். அதில் மணமகன் மயங்கவே அங்கிருந்த ரூ.20000 பணம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

பிறகு மணமகன் வீட்டார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். பின்னர் தான் அந்த அப்பாவி மணமகனுக்கு நகை, பணத்தை கொள்ளையடிப்பதற்காக அந்த பெண திருமணம் செய்தார் என்று. இதேபோன்று ஒரு சம்பவம் ஷாஜகான்பூரில் நிகழ்ந்துள்ளது. திருமணமான 5 மணி நேரத்தில் விலைமதிப்புடைய நகைகளை சுருட்டிக் கொண்டு மணமகள் தப்பி ஓடியுள்ளார். திருமணம் என்ற பேரில் மணமகள்கள் கொள்ளையடிப்பில் ஈடுபட திருமணம் வேண்டுமா, வேண்டாமா ? என்ற குழப்பத்தில் ஆண்கள் ஆழ்ந்தனர்.

Previous articleகாயத்தால் கேப்டன் மோர்கன் விலகல் – பின்னடைவில் இங்கிலாந்து
Next articleஒரு நிமிஷம் நில்லுங்க! குஷ்புவிடம் அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பிய சிறுமி! வைரல் வீடியோ