குக்வித் கோமாளியின் வைல்ட் கார்ட் வின்னர் யார் தெரியுமா!

Photo of author

By Rupa

குக்வித் கோமாளியின் வைல்ட் கார்ட் வின்னர் யார் தெரியுமா!

Rupa

Who knows the wildcard winner of the Ququit Clown!

குக்வித் கோமாளியின் வைல்ட் கார்ட் வின்னர் யார் தெரியுமா!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.பிக்பாஸை விட அதிக அளவு ரசிகர்கள் கொண்ட ஷோ  தான் குக் வித் கோமாளி.இதில் வரும் கோமாளிகள் குக்குகளுடன் சேர்ந்து செய்யும் விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு காமெடியாக தெரிகிறது.

அதில் முக்கியமாக மணிமேகலை,புகழ்,சிவாங்கி,பாலா ஆகியோர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் குக்குகளுடன் சேர்ந்து நடத்தும் நகைச்சவை அனைத்தும் வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.இது முதல் சீசனிலேயே அதிக அளவிற்கு விஜய் டிவிக்கு டி.ஆர்.பி கொடுத்தது.அதில் சிறிதளவு மாற்றம் கூட இல்லாமல் இந்த சீசனும் டிஆர்பி ஏறியுள்ளது.

போன சீசனின் குக் வித் கோமாளியின் வின்னராக அனிதா விஜயகுமார் வெற்றிபெற்றார்.அதேபோல் இந்த சீசனின் வின்னர் யார் வர போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த சீசனின் ஹை-லெட் ஆக சிவாங்கி மற்றும் அஷ்வினின் பேரை வைத்து அதிக அளவு மீம் கிரியேட்டர்கள் சம்பாதித்தனர்.அதுமட்டுமின்றி அவர்களின் ஜோடிக்கென்றே அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.

அதன்பின் சிவாங்கி மற்றும் புகழ் அண்ணன் தங்கை பாசத்தை பார்த்த அனைவருக்கும் நமக்கும் இவர் போல அண்ணன் வேண்டும்மென்று நினைக்க வைக்கும் அளவிற்கு அண்ணன் தங்கை உறவின் மூலம் பிரபலமடைந்து விட்டனர்.அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 2 வின் பைனலிஸ்ட் ஆகா அஸ்வின்,பாபா பாஸ்கர்,கனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் வைல்டு கார்ட் ரவுண்டு நடந்தது இதில் சகிலா,தீபா,தர்ஷா மற்றும் பவித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் ரவுண்டில் கலந்துக் கொண்டனர்.இதில் நேற்று அட்வான்டேஜ் டாஸ்க் வின்னராக ரித்விக்கா,சகிலா வெற்றிபெற்றார்.அதனைத்தொடர்ந்து இன்று குக் வித் கோமாளியின் லாஸ்ட் பைனலிஸ்ட் ஆக சகிலா போக இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.