இதுமட்டும் நடந்தால்! தமிழக மக்களை எச்சரித்த பிரதமர் மோடி!

0
249
Modi
Modi

பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த குழந்தை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என படு கொச்சையாக பேசினார்.

ஆ.ராசாவின் ஆபாச பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் பல்வேறு காவல்நிலையங்களில் எச்.ராஜா மீது அதிமுகவினர் புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் என்னவானாலும் பேசுவார்களா?. இந்த மாநிலத்தின் முதல்வருக்கே இப்படியொரு நிலை என்றால், உங்களைப் போன்ற சாமானிய மக்களை யார் பாதுகாப்பது.

இப்படிப்பட்ட அராஜக திமுகவின் கையில் கொடுத்தால் தாய்மார்களின் நிலை என்னவாகும்?. தாய்மார்களை கொச்சைப்படுத்தியவர்களுக்கு தக்க தண்டனை கொடுங்கள். ஏழை, பணக்காரர்கள் எல்லாருக்கும் தாய் தான் உயர்ந்தவர். என் தாயை இழிவாக பேசியவர்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பார். என் தாய் கிராமத்தில் வளர்ந்தவர், இரவு பகல் பாராமல் உழைத்த விவசாயி. அவரைப் பற்றி இப்படி அவதூறு பேசுகிறார்கள்’ என கண்கலங்கியது அதிமுகவினரையும், தமிழக மக்களையும் கொந்தளிக்க வைத்தது.

திமுக தலைமையிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாகும், வாக்கு வங்கியை காப்பாற்றும் நோக்கத்துடனும் ஆ.ராசா பட்டும்படாமல் முதலமைச்சரிடம் மன்னிப்பு கோரினார். இப்படி பெண்களை அவமதிக்கும் கட்சிக்கு வாக்களித்தால் என்னவாகும் என பிரதமர் மோடி தமிழக மக்களை எச்சரித்துள்ளார். இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 13 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி திமுகவின் ஆணவ பேச்சுக்கு சவுக்கடி பதிலடி கொடுத்துள்ளார். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேச்சில் எவ்வித வாக்குறுதியோ, செயல் திட்டங்களோ இல்லை. அனைத்துமே அடுத்தவரை அவமானப்படுத்துவதாக உள்ளது. தற்போது திமுக, காங்கிரஸ் கூட்டணி புதிதாக ஒரு ஏவுகணையை கையில் எடுத்துள்ளது. அந்த 2ஜி ஏவுகணை பெண்களை இழிவுபடுத்துவதற்காக ஏவப்பட்ட ஏவுகணை ஆகும். சிறிது நாட்களுக்கு முன்பாக திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், தமிழக பெண்களை இழிவுபடுத்தி வருகிறார்கள். நான் இந்த மேடையில் இருந்து சொல்கிறேன். காங்கிரஸ், திமுக உங்களுடைய தலைவர்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

நான் திமுகவிற்கும், காங்கிரஸுக்கும் சொல்கிறேன், தமிழக மக்கள் இப்படி பெண்களை இழிவுபடுத்துவதை வேடிக்கை பார்க்கமாட்டார்கள். இன்று திமுக நம்முடைய மதிப்புக்குரிய முதலமைச்சரின் தாயாரை இழிவாக பேசி இருக்கிறார்கள். கடவுளே ஒருவேளை இவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழக பெண்களின் நிலையை சிந்தித்து பாருங்கள். இன்னும் பெண்களை அவமதிப்பார்கள், இழிவு செய்வார்கள் என சாடினார்.

Previous articleதளபதி 65 படத்தின் அடுத்த அப்டேட்! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!
Next article1000  ரூபாய் 1500 ரூபாய் தரம்முண்ணு சொல்லரதை நம்பாதீங்க!! கஜானாவை சுரண்டும் ஆட்சி!! டிடிவி தினகரனின் அதிரடி பேச்சு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here