சசிகலாவிற்கு அதிர்ச்சிக்கொடுத்த சென்னை மாநகராட்சி!

0
191

சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரிமாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா சுதாகரன் இளவரசி உள்ளிட்ட மூவரும் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார்கள்.இந்த நிலையில், 4 ஆண்டுகாலம் சிறைவாசம் முடிந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்து சேர்ந்தார். அவர் தமிழகம் வந்து சேர்ந்ததில் இருந்து மிகத்தீவிரமான அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

ஆனால் அவர் திடீரென அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவருட ஆதரவாளர்கள் மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனை தொடர்ந்து சசிகலாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்று அங்கிருந்து தன்னுடைய ஆன்மீகப்பயணத்தை தொடங்கி இருக்கிறார் சசிகலா.

அவர் தன் உறவினர்களுடன் பல்வேறு கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறார்.இந்த சூழ்நிலைகளில், சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று சொல்லப்படுகிறது.சசிகலா மற்றும்.இளவரசி உள்ளிட்டோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என சொல்லப்படுகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுமென்றுதான் அவரின் பெயரை நீக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleஅலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!!  
Next articleஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!!