ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பால் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? தேர்தல் அதிகாரி விளக்கம்…!
கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. அதிலும் இந்தியாவால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
தமிழகத்திலும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் நாளை தொடங்கி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.
அதற்கு காரணம், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்பதுதான். அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும் என்ற அச்சம் அவர்களிடேய ஏற்பட்டுள்ளது.
இதற்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். மே 2 ஆம் தேதி ஊரடங்கு விதிமுறை பொருந்தாது என்றும், கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 30 வரை மட்டுமே, மாத இறுதி வரை மட்டுமே நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளதால், அரசியல் கட்சியினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.