தேர்தல் பரப்புரையை ரத்து செய்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

0
109

நாட்டில் நாளுக்கு நாள் இந்த நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாட்டில் ஒரு உயிரிழப்பும், பாதிப்பும், மிகவும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.இதற்கு பொதுமக்களின் அலட்சியம்தான் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறுகிறார்கள். அதன் காரணமாகவே இந்த நோய்த்தொற்று வேகம் அதிகமாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த நோய் தொற்று முதலில் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் இருந்த அளவிற்கு பொதுமக்களிடம் தற்போது விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே இதுபோன்ற அலட்சியமான முறையில் பொதுமக்கள் இருந்து வருகிறார்கள். அவர்களின் அலட்சியம்தான் தற்சமயம் இந்தியாவை இந்த நோய் தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ,உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோய் தொடரின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படிக்க கையில் இல்லை ஆக்சிசன் இல்லை மருந்து இல்லை தடுப்பு ஊசி இல்லை என பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது.

அதோடு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை என உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்த பாதிப்பு அதிகம் இருக்கின்ற மாநிலங்களைச் சேர்ந்த முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணி அளவில் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

அவர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் சுமார் பன்னிரண்டு முப்பது மணி அளவில் நாட்டின் முன்னணி ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அவர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்றைய மேற்குவங்க மாநிலத்தின் தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்துவிட்டு இந்த ஆலோசனைகளை பிரதமர் நரேந்திர மோடி நடத்துகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் காணொளி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி பரப்புரையை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னரே பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆலோசனை செய்து இருக்கிறார். அதனை அடுத்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளிடம் நேற்று ஆலோசனை செய்து இருக்கிறார். அவர்களிடம் நாடு முழுவதும் இருக்கின்ற பாதிப்பு மற்றும் தற்போதைய தேவைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஉட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
Next articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரபலம்! பரபரப்பான அரசியல் களம்!