தற்போது நோய்த்தொற்று அதிகரித்து வரும் என்ற நிலையில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தடுக்க அதற்கு காரணம் என்ன என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மிகக் கடுமையாக சாடி இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. ஆனால் இந்த தேர்தலின் முடிவில் கொரோனா தொற்றிற்கான தடுப்பு விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டன.அதற்கு உதாரணமாக, சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற இந்த ஐந்து மாநிலங்களில் ஒரு சில மாநிலங்களில் நோய்தொற்று அதிகரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் தமிழகமும் இருந்து வருகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு செய்யப்பட்டிருக்கின்றன. நடவடிக்கைகள் என்ன அரசியல் கட்சிகள் தேர்தல் பேரணிகளை நடத்தவிடாமல் தடுக்காமல் தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது. இப்போது இருக்கும் நிலைமைக்கு முழுமையாக தேர்தல் ஆணையமே பொறுப்பு, இந்த தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற விட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு முழுமையாக தடைவிதிக்கப்படும் என நீதிபதிகள் கடுமையாக எச்சரித்து இருக்கின்றனர்.
தொற்றுக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முழுமையான விதிமுறைகள் இருந்து வருகின்றன. ஆனால் அதில் எந்த விதிகளையும் பின்பற்றப்படவில்லை. மக்களுடைய உடல் நலமும் சுகாதாரமும் தான் முக்கியம், மக்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே அவர்களால் ஜனநாயக கடமையை செய்ய முடியும் உரிமைகளை நிலைநாட்ட இயலும் என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி தெரிவித்திருக்கிறார்.