கலைந்தது திமுகவின் வேஷம்!

0
211

தூத்துக்குடியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரித்து கொடுப்பதற்கு மட்டும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஆக்சிசன் உற்பத்திக்காக ஆலையை திறக்கலாம் என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது. ஆனாலும் தமிழக அரசு தொடர்ச்சியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு தெரிவிப்பது கொஞ்சமும் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறது.

ஆக்சிசன் இல்லாமல் மக்கள் இறப்பதை விடவும் இந்த நிறுவனத்தை தமிழக அரசு ஏற்று நடத்தலாம் என்று தெரிவித்திருக்கிறது. எந்த நிறுவனம் என்பது முக்கியமல்ல மக்களின் உயிர் தான் முக்கியம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டி இருக்கின்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுக சார்பாக ஆர் எஸ் பாரதி, கனிமொழி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோலபன்னீர்செல்வம் அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார் ,போன்றோரும் பங்கேற்றிருக்கிறார்கள் பாஜகவின் சார்பாக அந்த கட்சியின் மாநில தலைவர் முருகன் கே டி ராகவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பாலகிருஷ்ணன், சௌந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முத்தரசன், வீரபாண்டியன் காங்கிரஸ் சார்பாக கேவி தங்கபாலு, ஜெயகுமார் ,பாமக சார்பாக மாநில துணை பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்று இருக்கிறார்கள். ஆலைக்கு எதிராக ஆரம்பம் முதலே போராடி வரும் மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, மற்றும் மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆக்சிசன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதி கொடுக்கலாம் என்று எதிர்கட்சியான திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தெரிவித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழக அரசின் உயர்மட்ட குழுவின் கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கலாம் என்று திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் கருத்து தெரிவித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவைப்படும் அளவிற்கு மட்டுமே மின்சாரம் வழங்கலாம் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனின் பெரும்பாலான அளவு தென் தமிழகத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜனை உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது. என்பதை உயர்மட்டக்குழு உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous article2021 ஆண்டிற்க்கான 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நிறைவேறியது!!
Next articleஅப்செட்டான உயர்நீதிமன்றம்! வாக்கு எண்ணிக்கைக்கு தடையா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here