ஸ்டாலின் பதவியேற்பு விழா! மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்று வருகிறது.இந்த தேர்தல் ஆரமித்த நாளிலிருந்தே தேர்தல் களம் பரபரப்பாகவே காட்சியளித்து.இந்நிலையில் மக்கள் எந்த தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது முடிவுகள் வெளிவரும் வரை கேள்விக்குறியாகவே இருந்தது.பல கருத்துகணிப்புகளில் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று கூறினர்.இருப்பினும் அந்த கருத்துகணிபை பலர் எதிர்க்கவும் செய்தனர்.அதனையடுத்து மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தது.கருத்துகணிப்பில் கூறியதை போலவே திமுக 159 இடங்களில் இடம்பெற்று தனிபெருமான்மையுடம் வெற்றி பெற்றது.அதனையடுத்து அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்தது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கூறியதை நிறைவேற்றுவாரா என பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.ஏனென்றால் திமுக,ஆட்சியில் 10 ஆண்டுகள் இல்லாத காரணத்தினால் பல வன்முறைகள் நடக்க கூடும் எனவும் கூறினர்.அதே போல ஸ்டாலின் பதவியேற்கும் முன்னதாகவே அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கி திமுக தலைவர் ஸ்டாலின் புகைப்படத்தை வைக்குமாறு தகராறு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திமுக 10 ஆண்டுகள் கழித்து ஆட்சி அமைக்க இருப்பதாலும்,ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளதாலும் பலர் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.திரையுலகினரிலிருந்து எதிர் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.அந்தவகையில் இன்று தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.இவர் பதவியேற்பு விழாவிற்கு எதிர் கட்சி தலைவர் பொருளாளர் பன்னீர்செல்வம்,மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.அதேபோல பாஜக சார்பாக கணேசன்,காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,முன்னால் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.மதிமு கட்சி தலைவர் வைகோ ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து கட்சி தலைவர்களும் இணையத்தின் மூலம் பாராட்டுக்களை ஸ்டாலினுக்கு தெரிவித்த நிலையில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் மட்டும் நேரில் சென்று பாராட்டுக்களை தெரிவித்தார்.இவர் முதலில் சரத்துகுமார் கூட்டணியை சேர்க்கும் போதும் நேரில் சென்று கைகுலுக்கி கூட்டணியை சேர்த்தனர்.இவ்வாறு திமுக ஸ்டாலினையும் நேரில் சந்தித்துள்ளார்.அதனால் இவர்களுடனும் கூட்டணி அமைக்க போகிறார்களா என பலர் பேசி வருகின்றனர்.