முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்! கண்ணீர்விட்ட துர்கா ஸ்டாலின்!

0
161

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

இன்று காலை 9 மணி பத்து நிமிடம் அளவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று ஆரம்பித்து பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஸ்டாலின். பதவியேற்பு உறுதிமொழியையும் ரகசிய காப்பு பிரமாணத்தை ulamaara என்று தெரிவித்து மேற்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் பார்வையாளர்களின் வரிசையில் அமர்ந்திருந்த அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் திடீரென்று கண் கலங்கி இருந்தார். அவருடன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் போன்ற குடும்பத்தினரும் பங்கேற்றார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது மூன்றாவது முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார். பதவி ஏற்றுக் கொண்டவுடன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். தொடர்ச்சியாக பல அமைச்சர்களும் பதவியேற்பு உறுதிமொழியை ஆளுநர் செய்து வைக்க அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

Previous articleஸ்டாலின் பதவியேற்பு விழா! மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு!
Next articleபதவியேற்பு விழாவில் கண்ணீர் வடித்த ஸ்டாலின் மனைவி! மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததாலா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here