ஒரு வருடத்திற்கு பின்னர் அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

0
91

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் புதிய அமைச்சரவை பதவி ஏற்க இருக்கிறது. இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் எந்தவிதமான பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் சட்டசபை உறுப்பினர் தேர்தலில் நிற்பது மாட்டாரா என்று இரு மாறுபட்ட கருத்துக்கள் இருந்த நிலையில் அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதன்மைச் செயலாளர் கே என் நேரு மற்றும் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் நிற்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்தார்கள் இது நடந்தது தேர்தலுக்கு முன்பு என்று சொல்கிறார்கள்.

அதேபோல சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் களம் கண்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றியும் அடைந்து விட்டார் .வெற்றியடைந்த கையுடன் திமுக முக்கிய தலைவர்கள் மட்டுமல்ல கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அவருக்கு எதிரணி ஆக இருந்த விஜயகாந்த் போன்ற தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். உதயநிதி ஸ்டாலின்.

ஆகவே திட்டமிட்டபடி உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பிற்கு வந்துவிடுவார் அதனால்தான் எல்லா கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று திமுக வட்டாரங்களில் பேச்சுக்கள் எழ தொடங்கின. ஆனால் நேற்று வெளியான திமுகவின் அமைச்சரவை பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை இதுதொடர்பாக திமுக தலைவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்களில் விசாரணை செய்த சமயத்தில் கிடைத்த தகவலாவது,

உதயநிதி ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது உறுதியான போதே அவர் அமைச்சரவையில் இடம் பெறுவதும் உறுதியானது இதுதொடர்பாக ஸ்டாலின் யோசித்துக்கொண்டிருந்த சமயத்திலும் கூட குடும்பத்தினர் வற்புறுத்தி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடத்தை உறுதி செய்தார்கள். அவருக்கு உள்ளாட்சித்துறை வழங்கப்படலாம் என்று இளைஞரணி நிர்வாகிகள் பேசிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், தேர்தல் முடிவுகள் மே மாதம் இரண்டாம் தேதி வந்த பின்னர் இந்த முடிவில் சற்று மாற்றம் ஏற்பட ஆரம்பமானது எதிர்பார்த்தபடி 150க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றிபெற்று கூட்டணியுடன் சுமார் 180 மற்றும் 190 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் உதயநிதி நிச்சயம் வலிமையான துறையின் அமைச்சராக இருப்பார் இப்போது 225 இடங்களில் தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது இதுபோன்ற சூழ்நிலையில் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினை உடைக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்று வந்துவிட்டால் முக்கிய துறையை கொடுத்தால்தான் அது பொருத்தமாக இருக்கும் இப்பொழுதே சீனியர் பலர் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இன்னும் சில மாதங்களிலோ அல்லது ஒரு வருடத்திற்கு மேலாகவும் சென்ற பின்னர் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது உதயநிதிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது என சொல்கிறார்கள்.