இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது!
அந்த காலத்தில் மூச்சு திணறல் மற்றும் சுவாச பிரச்சனைகள் வராமல் இருக்க சித்தர்கள் பயன்படுத்திய மூலிகையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
திருநீற்றுப்பச்சிலை என்ற மூலிகையை நாம் கேள்விப்பட்டு இருப்போம். இந்த இலைதான் மூச்சுத்திணறல் சுவாச நோய்கள், நுரையீரல் நோய் ஆகியவற்றில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது.
பிராண சக்தியை முழுமையாக பெறுவதற்காக தங்கள் குகைகளின் முன் இந்த திருநீற்றுபச்சிலை செடிகளை வளர்த்து வந்தார்கள் என்று சாஸ்திரம் கூறுகின்றது.
1. இந்த திருநீற்றுப்பச்சிலை இலைகளை 10 எடுத்து நன்கு கசக்கி முகர்ந்து வரும் பொழுது மூச்சுத் திணறல் வராமல் தடுக்க முடியும். சளியால் ஏற்படுகின்ற மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக அமையும்.
2. இந்த திருநீற்றுபச்சிலை இலைகளை கசாயம் ஆகவோ அல்லது பொடியாகவோ கலந்து தினமும் சாப்பிட்டு வரும்பொழுது பிராண சக்தியை அதிகரிக்க செய்து சுவாசப் பாதையிலுள்ள தொற்றுக் கிருமிகளை அழிக்க வல்லது.
3. இந்த திருநீற்றுப்பச்சிலை இலைகளோடு தூதுவளை இலைகளையும் சேர்த்து நன்றாக அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு 300 மி.லிட்டர் தண்ணீரில் கலந்து சுண்டக் காய்ச்சி பருகி வரும்பொழுது நுரையீரல் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.
4. இப்பொழுது ஏற்படுகின்ற கொரோனாவின் மூச்சுத் திணறலுக்கு, இரவு படுக்கப்போகும் முன் பசும்பாலில் மூன்று கிராம் அளவிற்கு குப்பைமேனி இலை பொடியை கலந்து குடித்து வர மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஆகியவை மறைந்து போகும்.
5. குப்பைமேனி இலைகளின் மகத்துவம் அறியாதவர்கள் இருக்க முடியாது. குப்பைமேனி இலையை பொரியலாகச் செய்து சாப்பிட்டு வர எந்த ஒரு வைரஸ் கிருமிகள் நம்மை அண்டாது.
6. அதுமட்டுமின்றி கொரோனாவில் இருந்து விடுபட இரண்டு கைப்பிடி நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு வேக வைத்து 2 சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து அதில் வரும் நீராவியை முகர்ந்து வேது பிடிக்கும் பொழுது தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். சுவாசம் தங்குதடையின்றி வரும்.
இவ்வாறு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களே நமக்கு கொடிய நோய்களிலிருந்து விடுதலை அளிக்கிறது. அதனால் இதனை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.