வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி தமிழக முதல்வருக்கு வன்னியர் அமைப்பு கோரிக்கை
கடந்த அதிமுக ஆட்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும் அப்போதைய சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் முயற்சியாலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஆரம்பம் முதல் இடத்திற்கு ஏற்ற வகையில் மாறுபட்ட கருத்துக்களை கூறி திமுக இதை எதிர்த்தே அரசியல் செய்து வந்தது.இந்நிலையில் ஆட்சியமைத்துள்ள திமுக சமீபத்தில் வெளியான இரு அறிவிப்புகளில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை புறக்கணித்துள்ளது வன்னிய சமுதாய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை எதிர்த்து ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு வன்னிய அமைப்புகள் இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் அகில இந்திய வன்னியர் குல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.வன்னியர் உள் ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டி வெளியிட்டுள்ள அந்த கோரிக்கையில் கூறியுள்ளதாவது.
எங்கள் பேரமைப்பு சார்பாக தாங்கள் முதல் அமைச்சர் ஆனதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கடந்த விக்கிரவாண்டி இடைதேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று கூறினீர்கள். அதை இந்த நோய்தொற்று காலத்தில் நாங்கள் கேக்கவில்லை.ஆனால், எங்களுக்கு கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட கல்வி & வேலைவாய்ப்பு உள் இட ஒதுக்கீடு 10.5 % இடஒதுக்கீடு உங்கள் ஆட்சி அமைந்த பிறகு இந்த கல்ல்லுரி ஆண்டில் அம்பேத்கார் சட்ட பல்கலை கழக மாணவர் சேர்க்கையில் தங்கள் அரசாங்கம் தனியாக MBC(V) குறிப்பிட்டு இருந்தது.
அதை தற்போது நீதிமன்ற வேலை வாய்ப்பில் தங்கள் அரசாங்க அறிவிப்பில் இது வெளியாகாமல் இருக்கிறது. தங்கள் அரசு MBC துறை அமைச்சர் இதில் நீதிமன்ற வழக்கு இருப்பதால் அதை முறையாக அறிவிக்க இயலவில்லை என்று கூறி இருக்கின்றார். அவர் இந்த முறை தான் அமைச்சர் ஆகி இருக்கின்றார். நீங்கள் அனுபவம் வாய்ந்த அமைச்சர் மற்றும் முன்னாள் துணை முதல் அமைச்சர் , தற்போதைய முதல் அமைச்சர்., உங்களுக்கு தெரியாமல் தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் என்று நாங்கள் கட்சி சாரா வன்னியர் சங்கங்களின் பேரமைப்பு நினைகின்றோம்.
இந்த கல்வி & வேலைவாய்ப்புகள் கிடைக்க இருபத்தி ஒரு உயிர்கள் பலியாக இந்த வன்னியர் சமூகம் கொடுத்து இருக்கிறது. ஆறு பேர் நிரந்தர மாற்று திறனாளிகள் என்று இருகின்றார்கள். இவர்கள் அனைவரும் வன்னியர்கள். தங்கள் தந்தை முதல்வர் பொறுப்பில் இருந்த போது தாங்கள் முதல் சட்டமன்ற உறுபினராக இருந்த காலத்தில்தான் போராட்டம் செய்யாத வன்னியர் இல்லாத நூற்றி ஏழு சாதிகளை சேர்த்து இடஒதுக்கீடு என்று பசிக்கு கஞ்சி கேட்டவர்களுக்கு தங்கள் தந்தை நீரும் கஞ்சியும் சேர்த்து 108 சாதிகளை சேர்த்து ஒண்ணுக்கும் உதவாதா இடஒதுக்கீடு ஒன்றை கொடுத்தார்.
அன்றையதினம் மருத்துவர் ராமதாஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் சேலத்து சிங்கம் தெய்வத்திரு. வீரபாண்டியார் அவர்களின் நிர்பந்தம் காரணமாக அதை ஏற்று கொண்டு உடன்படிக்கை ஆனது. அப்போது தங்கள் தந்தை சொன்னது : இப்பொது இந்த பழத்தை சுவையுங்கள், பிடிக்கவில்லை என்றால் மாற்று பழம் ஏற்பாடு செய்து தருகின்றோம் என்று கூறினார். இதான் அன்றைய இடஒதுக்கீடு வரலாறு. இது உண்மையா பொய்யா என்று உங்கள் கட்சி பொது செயலளார் மாண்புமிகு ஐயா. துரைமுருகன் அவர்களை கேட்டு பாருங்கள். உங்களுடன் இப்பொது உங்கள் கூட்டணியில் இருக்கும் சி.என்.ராமமூர்த்தி தான் அன்றும் தங்கள் தந்தையுடன் சேர்ந்து உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்து போட்டார். அன்றே எந்த வித கோரிக்கை மற்றும் போராட்டம் செய்யாத 107 சாதிகளை சேர்த்து எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
அதற்க்கு பிறகு 2006 தங்கள் ஆட்சியில் நிபந்தனை அற்ற ஆதரவு என்று வன்னியர் தனி இட ஒதுக்கீடு கேக்காமல் மருத்துவர் ராமதாஸ் தங்கள் தந்தை மீது கொண்ட பாசத்தால் அதை ஐந்து ஆண்டு காலம் ஆதரவு கொடுத்தார். விவரம் இல்லாமல் அப்போதும் மருத்துவர் ராமதாஸ் செய்து விட்டார். அந்த நேரத்தில் தான் தங்களுக்கும் துணை முதல் அமைச்சர் பதவியை கொடுக்க சொல்லி தங்கள் தந்தையிடம் வலியுறுத்தி அதை தங்களுக்கு துணை முதல் அமைச்சர் பொறுப்பும் வாங்கி கொடுத்தார். அப்போது கூட மருத்துவர் ராமதாஸ் எந்த நிபந்தனையையும் தங்கள் தந்தையிடம் கொடுக்கவில்லை.
அதன் பின்னர் அதிமுக ஆட்சி வந்த பிறகு பல்வேறு வன்னியர் அமைப்புகள்தான் அதிமுக முதல்வரிடம் எடுத்து கூறி அதை நடைமுறையில் கொண்டு வர முயற்சி செய்தனர். பின்னர் அப்போதைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் தான் இந்த உள் இட ஒதுக்கீடு கொடுக்க ரெடி செய்து வைத்தார். பிறகு அவர் மறைவிற்கு பிறகு வந்த முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதை 2018 ஆண்டே கொடுக்க இருந்தார், அப்போது தான் பாரளமன்ற தேர்தல் வந்ததால் அப்போது அது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த தேர்தல் கடைசி நேரத்தில் அவர்கள் மனசு வந்து வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக 10.5% உள் இட ஒதுக்கீடு கொடுத்தார்கள், அதற்கான அரசாணையை தமிழக அரசு இதழில் பிரசுரம் செய்து இருகின்றார்கள். முறையாக எல்லா வேலைகளும் நடந்து இருக்கிறது. இதை வைத்து தான் உங்கள் அம்பேத்கார் சட்ட பல்கலை கழக சேர்க்கையில் குறிப்பிட்டு இருந்தது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு கடந்த ஆட்சியில் வேலை கொடுத்தார்கள் , உங்கள் புதிய ஆட்சியில் வேலையை கல்வி தகுதி பார்த்து கொடுத்து இருகின்றீர்கள். அதுபோல் இடஒதுக்கீட்டுக்கு போராட்டம் செய்த தியாகிகளுக்கு வேலை கொடுக்குமாறு தங்களை மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். அப்படி கொடுத்தால் தான் அது சமூக நீதி பாராட்டும் அரசாக உங்கள் அரசு அமையும். இல்லை என்றால் ஒரு தலைபட்சமான அரசு என்ற பொருள் படும்படி ஆகிவிடும்.அம்பேத்கார் சட்ட பல்கலை கழகம் சேர்க்கையில் இருக்கும் உள் இட ஒதுக்கீடு எப்படி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு கிடைக்கவில்லை என்பது ஏதாவது அரசியல் உள் காரணங்கள் இருக்கின்றதா என்று தெரியவில்லை.
ஏற்கனவே எங்கள் வன்னியர் சமூக மக்கள் ஒரு விசயத்தை பொது வெளியில் பேசிக்கொண்டு இருகின்றார்கள். அது என்ன என்றால் ஏழு சட்டமன்ற உறுபினர்களை கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் நான்கு அமைச்சர்கள் நீங்கள் கொடுத்து இருகின்றீர்கள் , ஆனால் 22 சட்டமன்ற உறுபினர்களை கொண்ட வன்னியர் சமூகத்திற்கு 3 அமைச்சர் பதவி மட்டுமே கொடுத்து இருகின்றீர்கள் என்று பேசிக்கொண்டு இருகின்றார்கள். இந்த வேளையில் இந்த வேலைவாய்பு அறிவிப்பில் வன்னியர் உள் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று வன்னியர்கள் ஆதங்கம் படுகின்றார்கள். உயிரை கொடுத்த சமூகம் இன்னமும் சரியான சமூக நீதியை பெற முடியவில்லையே என்று அனைவரும் மிக மிக மன வேதனையில் இருகின்றார்கள்.
தங்களின் மேலான பார்வைக்கு சில தகவல்கள் :
#1994 முதல் 27 ஆண்டுகளாகவே தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக் எதிராக வழக்கு நடைபெறுகின்றது.
#2008 – 2019 வரை SCA இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு நடைபெற்றது.
#2019 முதல் EWS எதிராக வழக்கு நடைபெற்று வருகின்றது.
ஆனால் வழக்கு காரணம் காட்டி எந்த வித உள் இட ஒதுக்கீடும் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்காமல் தமிழக அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையை அமுல்படுத்தி இருக்கிறது என்பது வரலாற்று உண்மை.
அதனால் தாங்கள் முறையாக கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு 10.5% முறையை நீதிமன்ற வேலைவாய்ப்புகளில் முறையாக தங்கள் அரசாங்கம் அமுல்படுத்தும் என்று நம்புகின்றோம். தாங்கள் இதை செய்து கொடுத்து உண்மையான சமூக நீதியை வன்னியர் சமூக மக்களுக்கு கொடுக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.