தமிழ்நாட்டில் கனமழை எச்சரித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

0
212

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் போன்ற சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தர்மபுரி, நாமக்கல், சேலம், திருப்பூர், திருச்சி, கரூர் ,பெரம்பலூர், அரியலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜூன் மாதம் ஆறாம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகியவை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleவன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி வன்னியர் அமைப்பு கோரிக்கை
Next articleஇவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here