இன்று உலக சுற்றுச்சூழல் தினம்: இந்த ஐந்து மாற்றங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்!

0
200

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் ‌. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் உங்கள் வாழ்வில் ஒரு சிறந்த நாளாக இருக்க வேண்டுமெனில் ஐந்து மாற்றங்களை உங்கள் வாழ்வில் நீங்கள் கடைபிடித்தால் நாம் வாழ்வில் மேன்மை அடையலாம்.

நம் வீட்டு அலங்கார பொருட்கள், நாம் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள், மேஜைகள் மற்றும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு விற்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு நீங்கள் வாழ்வில் நிலையான ஒன்றை மாற்ற வேண்டும் என நினைத்தால் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தப்படும் தயாரிப்புகளை தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதற்கான சரியான நாள் என்றே கூறலாம்.வீட்டு அலங்காரப் பொருட்களில் இருந்து தோல் பராமரிப்பு பொருட்கள், மேஜை பாத்திரங்கள் மற்றும் வேறு ஏதேனும் ஒரு இருந்தாலும் கூட நம் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தனியான பிராண்டுகள் வந்துவிட்டன.

நீங்கள் எடுத்து வைக்கும் ஒரு சிறிய படி இந்த சுற்றுச்சூழலில் ஒரு பெரிய மாற்றத்திற்கு பங்களிக்க முடியும். நாம் வழக்கமாக ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பொருளை சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக மாற்றினால், சுற்று சூழல் தூய்மையான மற்றும் பசுமையான இடமாக மாறும்.

நம் வாழ்வை எளிதாக்குவதற்கு யாஷ் பக்கா லிமிடெட் பிராண்டின் தலைவரான ஸ்வாதி அகர்வால் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு மற்றும் பொருட்கள் என்னென்ன உள்ளன என்பதைப் பட்டியலிடுகிறார். அதைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை தூய்மையாக மாற்றுங்கள்.

1. உரமாகும் மேஜை பாத்திரங்கள்:

இந்த உரமாகும் மேஜை பாத்திரம் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு மற்றும் மற்றவைகளை மாற்றுவதற்கான சிறந்த வழியாக இருக்கும்.பிளாஸ்டிக் பொருட்கள் சிதைப்பதற்கு அதாவது மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்பதால் மக்கும் மேஜை பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை காப்பாற்றலாம். பாகாத் அதாவது கரும்பு கூல் பயன்படுத்தி நூறு சதவீதம் உரமாகும் மற்றும் மக்கும் பொருட்கள் உள்ளன. இவை எந்த ஒரு நச்சு இல்லாதவை. அதனால் இதை நீங்கள் பயன்படுத்தலாம்.

2. மூங்கில் பல் துலக்கி:

பெரிய மாற்றத்தை செய்வது கடினம் எனில் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் பல் துலக்க பயன்படுத்தப்படும் பல் துலக்கிகளை மூங்கிலால் செய்தவற்றை பயன்படுத்துவதன் மூலம் சிறிய மாற்றங்களை தொடங்கலாம். மூங்கிலால் தயாரிக்கப்பட்ட இந்தப் பல் துலக்கி கரி ஊற்றப்பட்ட முட்கள் கொண்டு பற்களை வெண்மையாக்குவதற்கு உதவுகின்றன. இந்த மூங்கில் கரிமம் இயற்கையாகவே பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.

3. மக்கும் குப்பை பைகள்:

மளிகை கடை உரிமையாளர் மற்றும் ஆடை சில்லரை விற்பனையாளர்கள் முதல் வீட்டு வேலைகளை செய்யும் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒன்றுதான் பாலித்தீன் கவர். அவற்றை சுற்று சூழலுக்கு ஏற்றவாறு மக்கள் மக்கும் குப்பை பைகளை பயன்படுத்துவதன் மூலம் நல்ல மாறுதல்களை கொண்டு வரலாம். சோளமாவை பயன்படுத்தி குப்பை பைகளை உற்பத்தி செய்கின்றனர். இதனால் விரைவில் மக்கி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துகிறது.

4. ஸ்ட்ராஸ்:

கோதுமையின் கழிவுகளை பயன்படுத்தி ஸ்ட்ராஸ் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்கள் உள்ளன. இந்த ஸ்ட்ராஸ் பொதுவாக ஆறு மாதங்களுக்குள் மக்கி விடுகிறதாம்.

5. மக்கும் நாப்கின்கள்:

இந்தியாவின் கழிவு நீர் அமைப்பு மற்றும் நீர்நிலைகள் மற்றும் நிலப் பரப்புகளை மாசு படுத்தும் வகையில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் முடியாத நாப்கின்கள் உள்ளனவாம்.இங்கு நாம் கவனிக்க விஷயம் என்னவென்றால் நாம் பயன்படுத்தப்படும் நாப்கின்கள் 90 சதவீதம் பிளாஸ்டிக். மக்கும் நாப்கின்களை பெண்கள் பயன்படுத்துவதன் மூலம் ஒரு புரட்சி தொங்குகிறது. மூங்கில் இலைகள் மற்றும் சோள மாவு போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட மக்கும் சானிட்டரி பேடுகள் உள்ளன. மற்றொரு சிறந்த விருப்பம் என்னவென்றால் மாதவிடாய் கப்ஸ். இது மீண்டும் பயன்படுத்தலாம். நீண்ட ஆயுளை கொண்டிருக்கும்.

நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன மாற்றங்கள் நம் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்பதை மனதில் வைத்து அனைவரும் ஒரு புதிய மாற்றத்தை இந்த நாளில் உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்.

Previous articleமகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர்! குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படம்!
Next articleவெளியானது வலிமை திரைப்படத்தின் முதல் அப்டேட்! ரசிகர்கள் மகிழ்ச்சி!