எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் பளிச் பேட்டி!

0
135

போருக்குப் பின்னர் 25 மாவட்டங்களில் நேற்று வரை குறைந்துவிடுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். நோய் தொற்று பாதிப்பு நிலவரங்களை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் டிஎம்எஸ் வளாகத்தில் காணொலிக் காட்சி மூலமாக நடந்தது .இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசு அலுவலர்கள் இல்லாத நான்கு மருத்துவர்களும் மருத்துவ கல்வி இயக்குனர் உட்பட 9 பேரும் பங்கு கொண்டார்கள்.

இந்த கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிகமாக இருக்கின்ற மாதங்களில் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டு நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்த மாவட்டங்களில் micro-blogging செயல்படுத்துவது அடுத்து வரும் நோய் தொற்றுகளையும் தடுக்கும் தடுப்பு ஊசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ஊரடங்குக்கு பின்னர் 25 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் 9 மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலாகி நிலையில் இருக்கிறது. நான்கு மாவட்டங்களில் மிகத் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் 13-ஆம் தேதி வரையில் 6.5 லட்சம் தடுப்பூசிகள் வர இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் விவரங்களை மறைக்காமல் வெளியிட்டு வருகின்றோம். நோய் தொற்று பாதிப்பு காரணமாக, உயிரிழந்தவர்கள் தொடர்பாக ஒரு மாதத்திற்கு பின்னர் தகவல் வந்தாலும் அதனை சேர்த்து தினசரி நோய்த்தொற்று உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணக்கில் காட்டப்படுகின்றது என்று தெரிவித்திருக்கிறார். ஒரு சில மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கையை வழங்குவதற்கு தாமதம் உண்டாகிறது மற்றபடி எந்தவிதமான ஒளிவு மறைவும் கிடையாது. இது தொடர்பாக அவதூறுகளை மக்கள் நம்ப வேண்டாம். தமிழ்நாட்டில் 1107 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் .கருப்பு பூஜைக்கு வேறு சில மருந்துகளையும் மத்திய அரசு பரிந்துரை செய்திருக்கிறது. மருந்து இல்லை என்ற நிலையில் இதுவரையில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

Previous articleஅதிமுகவிற்குள் சித்து விளையாட்டை தொடங்கிய சசிகலா!
Next articleபாபநாசம் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது? திக்குமுக்காடும் போட்டோ ஷூட்!