9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

0
117

அயோத்தியில் 400 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த பேருந்து நிலையத்திற்கு யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 400 கோடி மதிப்பில் கட்டப்படும் பேருந்து நிலையம் பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் தரும் என்று கூறியுள்ளது.

அயோத்தியில் ரூ 400 கோடி செலவில் உலகத் தரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டும் பணியை ஆய்வு செய்ய அரசால் கடந்த 2020 ஆம் ஆண்டு ராம ஜென்மபூமி சேத்திர அறக்கட்டளை கட்டமைக்கப்பட்டது.

மொத்தம் இந்த அறக்கட்டளையில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கோயில் கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணி தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக பேருந்து நிலையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு மாநில கலாச்சாரத் துறை இடம் உள்ள 9 ஏக்கர் நிலம் போக்குவரத்திற்காக தரப்படும். அதில் 400 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து தரப்படும். இது அயோத்தியிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் நான்கு வழிச்சாலை உடன் கூடிய மேம்பாலம் அயோத்தி மற்றும் சுல்தான்பூர் இடையே அமைக்கப்படும் என்றும், 20 கோடி மதிப்பீட்டில் ஒன்றை கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.