மதுக்கடைகள் திறப்பு! போராட்டத்தில் குதித்த பாட்டாளி மக்கள் கட்சி!

0
168

ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் மதுக்கடைகள் பிறப்பை கண்டித்தும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து தமிழ்நாட்டில் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியானவுடன் பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார்கள். இதனை எதிர்த்து ஜூன் மாதம் 13ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியது. இந்த சூழ்நிலையில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஜூன் மாதம் 17ஆம் தேதி இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் சென்னை தி நகரில் இருக்கின்ற அவருடைய வீட்டு வாசலில் மதுக்கடை திறப்பு குறித்து எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பீரை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தர்மபுரி சட்டசபை உறுப்பினர் தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். இதேபோல தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்கள் வீடுகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை தி நகரில் இருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தின் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் இணை பொதுச்செயலாளர் ஏ கே மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஏகே மூர்த்தி மக்கள் பாதுகாப்புதான் முக்கியம் என்று தெரிவித்து வரும் சூழலில் நோய்த்தொற்று காலத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். சென்ற வருடம் அதிமுக அரசு மதுக்கடைகளை திறந்த போது போராட்டம் நடத்தி விட்டு என்று இன்று அவர்களே மதுக்கடைகளை திறந்து இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.

இன்னும் பதினைந்து தினங்கள் அமைதியாக இருந்திருக்கலாம் யாருடைய பேச்சையும் கேட்காமல் தங்களுடைய முடிவை எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்து மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி.

Previous articleதமிழகத்தில் ரயில்கள் செயல்படும் நேரம் மாற்றம்! வெளியிட்ட அட்டவணை!
Next articleவீடியோ: உதட்டை கடித்து பின்னழகை காட்டி, போட்டு தாக்கு பாடலுக்கு ஷிவானி ஆடிய நடனம்!