தமிழகத்தில் ரயில்கள் செயல்படும் நேரம் மாற்றம்! வெளியிட்ட அட்டவணை!

0
85

தெற்கு ரயில்வே துறையானது தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

கொரோனா வின் இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதற்காக பேருந்து போக்குவரத்து அனைத்து மாவட்டங்களிலும் தடை செய்யப்பட்டது. ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்பட்ட வந்தபொழுது கொரொனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைந்து வருவதால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இரயில்கள் செயல்பட்டு வந்தது.

குறைந்த எண்ணிக்கையில் மக்களின் வருகையால் அதிக ரயில்கள் இயங்காமல் இருந்துள்ளது. இப்பொழுது பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுவதால் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இப்பொழுது பெரும்பாலான ரயில்கள் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

1. காலை 4.20 மணிக்கு ராமேஸ்வரம் தினசரி சிறப்பு ரயில் வந்து சேரும்.
2. கொல்லம் – எழும்பூர் தினசரி சிறப்புரையில் கோவில்பட்டிக்கு இரவு 8.53 மணிக்கும், சாத்தூருக்கு இரவு 9.13 மணிக்கு வரும்.
3. எழும்பூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில் தூத்துக்குடி ரயில்வே நிலையத்திற்கு காலை 6.40 மணிக்கு வந்து சேரும்,
4. எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் காலை 8.25 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும்.
5. தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் தினசரி மாலை 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும்.
6. சாத்தூர் ரயில் நிலையத்திற்கு மாலை 6.03 மணிக்கு வந்து சேரும்.
7. அதேபோல் ஒகா – தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் தூத்துக்குடி நிலையத்தை அதிகாலை 4.40 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1623857332946-Special%20trains%20list.pdf

author avatar
Kowsalya