நண்பன் எப்பொழுதுமே வெயிட் தான்! தன் நண்பனுக்காக உயிரை விட்ட நரிகள்!

Photo of author

By Kowsalya

தன் நண்பன் உயிர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதை காப்பாற்ற சென்ற ஐந்து நரிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலத்தில் தான் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஆறு நரிகள் மின்சார கம்பியை கடித்துக்கொண்டே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கோழிக்கோட்டில் மரம் ஒன்று விழுந்தால் நரி ஒன்று அதனை தவறுதலாக மிதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது அதை காப்பாற்ற மின்கம்பியை கடித்த மீதமுள்ள ஐந்து நரிகளும்

பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

 

தன் நண்பனை காப்பாற்ற மின்கம்பியை கடித்த 5 நரிகள் உட்பட மொத்தம் 6 நரிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

 

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி மாபெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதைப் பார்க்கும் பொழுதே கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

 

விலங்குகளின் உலகிற்கு அப்பாற்ப்பட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் தன் நண்பன் உயிரை காப்பாற்ற தன் உயிரையும் பறி கொடுத்த சம்பவம் மிகவும் சோகமானது.