சாராயக் கடையை மூடி சன்னதியை திற! தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

0
189
Hindu Munnai Protest against DMK-News4 Tamil Latest Tamil News Today
Hindu Munnai Protest against DMK-News4 Tamil Latest Tamil News Today

சாராயக் கடையை மூடி சன்னதியை திற! தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள  ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக டாஸ்மாக் கடைகள் திறந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான அத்தியாவசியத் தேவைகளை எல்லாம் விட்டுவிட்டு மக்களை குடிக்க அடிமையாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை திறந்தது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கடந்த காலத்தில் அதிமுக அரசு டாஸ்மாக் கடையை திறந்து போது திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது ஆட்சியிலுள்ள திமுக டாஸ்மாக் கடைகளைத் திறந்தது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு எதிராகவும்,கோவில்களை திறக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இந்து முன்னணி சார்பில் கோவில்கள் முன்பாக சூடம் ஏற்றி  அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  குறிப்பாக அந்தப் போராட்டத்தின்போது சாராயக் கடையை மூடி சன்னதியை திறக்க வேண்டுமென கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களின் முன்பாக இந்து முன்னணி நகர செயலாளர் வெற்றிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கற்பூரம் ஏற்றி டாஸ்மாக்கை திறந்து கோவில்களின் மூடியுள்ள தமிழக அரசை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்ப் பட்டுள்ளது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு ஆலயங்களை திறந்து பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என  இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Previous articleமுக்கிய திட்டம் தொடர்பாக சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்!
Next articleகவலைப்படாமல் இருங்கள் அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்த சசிகலா! எதற்காக தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here