எம்.எல்.ஏ பவுலிங், முதல்வர் பேட்டிங்! ஆய்வுப்பணிக்கு சென்று ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர்!

0
198

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் மனதை வென்றவர். மேலும், அவர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

நிவாரணம் வழங்குதல் மற்றும் கொரோனாவின் போது ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் தரக்கூடாது என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவர் 2 நாள் பயணமாக கடப்பா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். கடப்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.

மேலும், கடப்பாவில் உள்ள விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது குறித்து ஆய்வினை செய்தார். அப்பொழுது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்களுடன் திடீரென முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சேர்ந்து கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.

எம்.எல்.ஏ அபினேஷ் ரெட்டி பந்தினை வீச, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேட்டிங் செய்தார். ஆய்வுப் பணிக்கு வந்த முதலமைச்சர் திடீரென மிகவும் ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடியதை கண்ட பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

Previous articleஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!
Next articleமிக மோசமான வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை! 25 நாடுகளுக்கு பாதிப்பு!