கோவிலுக்கு வந்த இடத்தில் நடந்த விபரீதம்! கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

0
159
Disaster at the place where he came to the temple! What happened to a woman from Kerala!
Disaster at the place where he came to the temple! What happened to a woman from Kerala!

கோவிலுக்கு வந்த இடத்தில் நடந்த விபரீதம்! கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல இடங்களிலும், நடந்தேறி வருகிறது. தற்போது கோவிலுக்கு சென்றால் கூட பாதுகாப்பு இல்லை என்பது போல உணர வேண்டி உள்ளது. எங்குதான் பெண்கள் நிம்மதியாக சென்று வரலாம் என யாருக்கும் தெரிவதில்லை. அரசு இதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

கேரள மாநிலத்தில் கண்ணூர் அரசு மருத்துவமனையில்  பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 40 இருக்கலாம் என சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் மருத்துவர்கள் அந்தப் பெண்ணிடம்  விசாரித்தபோது கடந்த மாதம் 20 ம் தேதி பழனி கோயிலுக்கு சென்ற போது தான் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறியுள்ளார்.எனவே உடனடியாக கண்ணூர் போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவமனையில், உள்ள பெண்ணும் அவரது கணவனும் கடந்த மாதம் 19 ம் தேதி பழனி மலை முருகனை பார்க்க கோவிலுக்கு வந்ததாகவும், 20 ம் தேதி அவரின் கணவர் உணவு வாங்க சென்ற போது அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று ஒரு தங்கும் விடுதியில், அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர் என்றும், பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றும் கூறினார். மேலும் அவர் அந்த மூன்று நபர்களில் ஒருவர் அந்த விடுதியின் காப்பாளர் என்றும் கூறினார்.

அந்த பெண்ணை காணவில்லை என்று அவரது கணவர் தேடும் போது விடுதியிலும் கேட்டு உள்ளார். அப்போது அவரை அந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரையும் தாக்கி உள்ளது. மேலும் அந்த பெண்ணின் அந்தரங்க பாகங்களில் பீர் பாட்டிலினால் தாக்கியதாகவும், கொடுமையான சித்ரவதைகளை செய்ததாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கும் போது போலீசார் புகாரை வாங்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாகவும் கூறினார்கள் என்றும் கூறினார். மேலும் அவர்கள் இது குறித்து கண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்ததாகவும் கூறினார்கள்.

இந்த வழக்கை பதிவு செய்த கேரள போலீசார், பழனி போலீஸில்,  துணை போலீஸ் சூப்பிரண்டை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்து உள்ளனர். தலசேரி துணை போலீஸ் சூப்பிரண்டு, டி.எஸ்.பி. மூசா வள்ளிகாதன் இது குறித்து கூறும்போது,  நாங்கள் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம் என்றும், அந்த குடும்பம் தமிழகத்தை சேர்ந்த குடும்பம் என்றும், வேலையின் காரணமாக கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், தங்கி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

நான் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவ அறிக்கையைப் பார்த்தேன், ஆனால் காயங்கள் எதுவும் இல்லை. மேலும் புகார் அளித்தவர்களின் கணக்குப்படி ஜூன் 20 அன்று சம்பவம் நடந்ததாக கூறப்படுவதால்  காயங்கள் குணமாகி இருக்க கூடும்.

தற்போது பரியாராமில் உள்ள ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்படும். மேலும் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்கப்படுவார்கள். மேலதிகாரிகளின் விசாரணைகளுக்காக இந்த விவரங்கள் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Previous articleநடிகர் சூர்யா படத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!! யாருக்கு சான்ஸ் கொடுப்பார்??  
Next articleதெலுங்கு சினிமாவில் கால்வைக்கும் சிவகார்த்திக்கேயன்!! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!!