சென்னையில் மீண்டும் உயரும் தங்கம் விலை!! சோகத்தில் இல்லத்தரசிகள்!!

0
133

தமிழ்நாட்டில் சென்னையில் தங்கள் வெளியில் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து உள்ளது. இன்று காலை தங்க விலையின் நிர்ணயப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,521 ரூபாய்க்கும் சவரன் 36,168க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை சில்லறை வர்க்கத்தில் இன்று ஒரு கிராம் வெள்ளி 74.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. சென்னையில் சிறிது நாட்களாகவே தங்கத்தின் விலையானது ஏறியும் பின் சரிந்தும் மாறிக் கொண்டே வருகிறது. தங்க விலையானது ஒருநாள் உயர்ந்தும், மற்றொரு நாள் சரிந்தும் காணப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலையானது 5,000 த்தை நெருங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை வாசிகள் தங்கம் வாங்குவதை பற்றி நினைத்து கூட பார்க்க முடியவில்லை. திருமணம் மட்டும் அல்லாமல் எந்த ஒரு நல்ல நிகழ்விற்கு தங்கம் அளிப்பதே நம் பாரம்பரியமாக இருந்து வருகிறது.

ஆனால் தங்கத்தின் விலையின் காரணமாக தற்போது அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் கட்ட பரவல் என்பது மிகவும் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு இடையே தங்கத்திற்கான தேவை என்பது மீண்டும் அதிகரித்து உள்ளது.

நேற்றைய தங்க நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து சவரன் 36,048ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 73,90ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Previous articleதமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை! எம்.எல்.ஏ. பளீச் பேட்டி!
Next articleதலைவி படத்திற்க்கு ஆப்பு!! நடிகை கங்கனா ரணவ்த் அதிரடி தகவல்!!