கர்ப்பம் தரிப்பதற்கு தடை! ஜிகா வைரஸ்!
கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஜிகா என்னும் வைரஸ் நோய்த்தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஜிகா வைரஸ் ஏடிஎஸ் வகைக் கொசுக்களின் மூலம் பரவுகிரதாம். கேரளாவில் இதுவரை ஜிகா நோய்த்தொற்று 21 பேருக்கு உறுதியாகி உள்ளது குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு அதிகம் இந்த ஜிகா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் கூறியது என்னவென்றால்,
கர்ப்பிணி பெண்கள் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களுக்கு பயணம் செய்யாமலும் அங்கிருந்து வரும் மக்களுடன் தொடர்பில் இல்லாமலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த வைரசுக்கு தடுப்பூசி ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவே ஜிகா வைரஸ் பாதித்த மாநிலங்களுக்கு தம்பதிகள் யாரும் பயணம் செல்லாமல் இருப்பதோடு குறைந்தது இரண்டு மாதங்களாவது கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப்போடுவது நல்லது என்றும் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இல்லை என்றால் ஜிகா வைரஸ் என்னும் நோய்த்தொற்று பரவலின் காரணமாக கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதோடு தன் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்பியல் போன்ற கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று எச்சரித்தனர். குறிப்பாக பகலில் கடிக்கும் கொசுக்களின் மூலமாகத்தான் ஜிகா என்னும் வைரஸ் அதிகம் பரவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனால் கொசுக்கள் கடிக்கதவாறு உடல் முழுவதும் மூடி வைப்பது நல்லது.
இதுபோன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் உள்ள வீட்டில் கொசுக்கள் வராமல் இருப்பதற்காக கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்பொழுதும் மூடி வைத்துக் கொள்ள வேண்டும். கொசுக்களை விரட்டுவதற்கு மருந்துகளை பயன்படுத்தலாம் ஆனால் சருமத்தில் படாதவாறு கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தண்ணீரில்தான் ஏடிஸ் போன்ற கொசுக்கள் முட்டையிடும் ஆகையால் வீடு மற்றும் அலுவலகத்திற்கு உள்ளே அல்லது வெளியே தேவையில்லாமல் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.