திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்! கோடாரியால் வெட்டிக்கொலை!

0
76

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கபூரை சார்ந்த சந்திரகலாவிற்கு அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து இருக்கிறார்கள். மாப்பிள்ளை எல்லா விதத்திலும் தகுதியானவர் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் கூட அவர் கருப்பாக இருப்பதாக தெரிவித்து சந்திரகலா முதலில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றார். இருந்தாலும் குடும்பத்தினர் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இரண்டு வீட்டினரும் ஒன்றிணைந்து நேற்றையதினம் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து திருமண புடவை போன்றவை எடுப்பதற்கு மற்றும் பத்திரிக்கை அடிப்பது என்று கல்யாண வேலைகளில் பரபரப்பாக இருந்து கொண்டிருந்த சூழலில் எல்லா வேலைகளும் முடிந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் தாலி கட்ட வேண்டியது மட்டுமே பாக்கி என்ற சூழலில் குடும்பத்தில் குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார் அந்த மணப்பெண்.

அதாவது அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரிவித்து நேற்று முன்தினம் வீட்டில் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். மாப்பிள்ளை கருப்பாக இருப்பதன் காரணமாக, எனக்கு பிடிக்கவில்லை அதனால் திருமணத்தை நிறுத்தி விடுங்கள் நான் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று குடும்பத்தினரிடம் தகராறு செய்து இருக்கின்றார். ஆனாலும் நாங்கள் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொல்லிவிட்டு தற்சமயம் இவ்வாறு தகராறு செய்தால் எப்படி என்று பெற்றோர்கள் எடுத்துக் கூறியும் அந்த பெண் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக, வீட்டில் அண்ணன் தங்கை இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அந்த சமயத்தில் கருப்பாக இருக்கும் மாப்பிள்ளை வேண்டாம் அதற்கு முன்னால் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று தந்தை கூறுகின்றார்.

அந்த மணப்பெண் இதன் காரணமாக, ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர் சியாம் வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து சரமாரியாக தாக்கி இருக்கின்றார். இந்த சம்பவத்தில் சந்திரகலா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் இதன் காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளானார். திருமண வீடு சோகத்தில் மூழ்கி விட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் தங்கையை கொலை செய்த சகோதரர் ஷியாம் சுந்தர் ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.