ஓர் சிம் ரூ.86,000 ஆயிரம்!! அதிர்ச்சியில் அரசு ஊழியர்!

0
133
Rs 86,000 per SIM !! Government employee in shock!
Rs 86,000 per SIM !! Government employee in shock!

ஓர் சிம் ரூ.86,000 ஆயிரம்!! அதிர்ச்சியில் அரசு ஊழியர்!

இந்த டெக்னாலஜி காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்து வருகின்றனர்.இந்த ஸ்மார்ட் போன் மூலம் பல தொழில்நுட்பங்களும் வளர்கின்றது.அதற்கு ஏற்றாற்போல் பல மோசடி கும்பல்களும் வளர்ந்து வருகிறது.மக்கள் பலர் இந்த மோசடி கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு மாட்டி கொள்பவர்கள் லட்ச கணக்கில் பணத்தை இழக்கின்றனர்.அரசாங்கம் தொடர்ந்து இதுபற்றி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறது.ஆனால் மக்களோ சில நேரங்களில் விழிப்புணர்வின்றி நடந்து கொள்கின்றனர்.

மக்கள் செல்போனிற்கு,வங்கியிலிருந்து அழைப்பது போல கூறி,அவர்களின் வங்கியின் அனைத்து விவரங்களையும் மோசடி கும்பல் பெற்று கொள்கின்றது.அதுமட்டுமின்றி மக்களும் வங்கியிலிருந்து தான் அழைத்து புதிய அக்கவுண்ட் புக்கிற்கு இவ்வாறு விவரங்களை கேட்கின்றனர் என நினைத்து அனைத்தையும் சொல்லி விடுகின்றனர்.இதுபோன்ற புகார்கள் சைபர்கிரைம்-யிடம் தினசரி வாழ்கையில் செல்வதே வழக்கமாக உள்ளது..தற்போது நடந்துள்ள நிகழ்வு இதற்கு மாறாக முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது.

சென்னையில் அரும்பாக்கம் அருகே எம்எம்டிஏ காலனி உள்ளது.இந்த காலனியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பாலன் வசித்து வருகிறார்.அவர் உபயோகம் படுத்தும் ஸ்மார்ட் போனிற்கு புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கியுள்ளார்.வாங்கிய நாளிலிருந்து அதனை ஆக்டிவேட் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.மர்ம நபர் ஒருவர் அவருக்கு அழைப்புவிடுத்து உங்க சிம் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் நான் அனுப்பும் லிங்கிற்கு ரூ.10 அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

அவர் அவ்வாறு கூறியதும் இந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரூ.10 அனுப்பியுள்ளார்.அவர் அனுப்பிய ஓரிரு நிமிடங்களுக்குள் அந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் அக்கவுண்டிலிருந்து ரூ.86,500 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.பணத்தை எடுத்த குறுஞ்செய்தி அவரது செல்போனிற்கு வந்தடைந்ததை பார்த்ததும் அவர் பெருமளவு அதிர்சியடந்துள்ளர்.அதனையடுத்து போலீசாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளார்.போலீசாரும் சைபர்கிரைமிடம் தகவல் அளிக்கப்பட்டு, பெரியவரை ஏமாற்றிய மோசடி கும்பலை தேடி வருகிறது.

அரசாங்கம் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் சிறு காரணங்களில் ஏமார்ந்து விடுகின்றனர்.தற்போது சிம் கார்டை ஆக்டிவேட் செய்வதாக கூறி அந்த ஊழியர் ஏமார்ந்த சம்பவம் எமஎம்டிஏ காலனி மக்களை அதிர்ச்சியடைய செய்தது.