அரசியலில் குதித்த ஜாக்கிஜான் சினிமாவைப் போலவே அரசியலிலும் டிஷ்யூம் டிஷ்யூம் தானா??

Photo of author

By CineDesk

அரசியலில் குதித்த ஜாக்கிஜான்!! சினிமாவைப் போலவே அரசியலிலும் டிஷ்யூம் டிஷ்யூம் தானா??

முற்காலத்தில் இருந்து தற்போது வரை திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது சகஜமாகி விட்டது. மேலும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சேகரிப்பதே அவர்கள் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில். தான் அந்த வகையில் தமிழகம் முதல் உலகம் வரை எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் பலர் திரை உலகில் இருந்து தான் அரசியல் வாழ்க்கையை தொடங்கினர். உதாரணத்திற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் முதல் தற்போது அரசியலில் இருக்கும் கமல், விஜயகாந்த், சரத்குமார், குஷ்பூ போன்றோர் வரை உள்ளனர். இதைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் ரொனால்ட் ரீ கன் என்ற நடிகர் தான் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்தார்.

சீனா என்று சொன்னால் நினைவுக்கு வருவது ஜாக்கிஜான் தான். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாக இருப்பவர் ஜாக்கி சான். ஜாக்கி சான் என்று சொன்னாலே அது ஆக்ஷன் படம் தான். மேலும் ஜாக்கிஜான் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு உலகளாவிய ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் இவருக்கு தற்போது 67 வயது ஆகிவிட்டதால் தற்போது எந்த ஒரு ஆக்க்ஷன் பட காட்சிகளிலும் நடிப்பது இல்லை. மேலும் அவர் சமீபத்தில் ஒரு திரைப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது சீனாவில் எல்லா புகழையும் அடைந்துவிட்டேன் தற்போது அரசியலில் இணைய ஆசை வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் சமீப காலமாக சீனா வேகமாக முன்னேறி வருகிறது. நான் பல நாடுகளுக்கு சென்று உள்ளேன் அப்பொழுது தான் என்னால் உணர முடிந்தது. மேலும் நான் சீனாவில் பிறந்ததற்காக மிகவும் பெருமிதம் கொள்கிறேன். உலகம் முழுவதும் ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட சிவப்பு கொடிக்கு மரியாதை கிடைக்கிறது என்பதிலும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே சீனா கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றி வருகிறது. அந்த கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக இருக்கிறேன். சினிமாவில் நான் நினைத்ததை எல்லாம் சாதித்து விட்டேன். அதனால் இனி வரும் காலங்களில் அரசியலில் ஈடுபட விருப்பம் உள்ளது என்று ஜாக்கிஜான் கூறி உள்ளார்.