மகனை ஹீரோ ஆக்கியது எப்படி? தங்கர் பச்சான் பேட்டி

0
197
Thangar Bachchan latest interview-News4 Tamil Latest Online Tamil News Today
Thangar Bachchan latest interview-News4 Tamil Latest Online Tamil News Today

மகனை ஹீரோ ஆக்கியது எப்படி? தங்கர் பச்சான் பேட்டி

தான் இயக்கம் டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தில் தனது மகனை ஹீரோவாக நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் அழகி,பள்ளிக்கூடம் போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற புதிய படத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய மகனை இந்த படத்தில் கதாநாயகனாக்கியது குறித்து தங்கர் பச்சான் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

எனது மகன் கதாநாயகனாக நடிப்பது தானாகவே அமைந்தது. எனது முதல் படம் மாதிரி இதை இயக்கி இருக்கிறேன். எனது முந்தைய படங்களில் உள்ள பாணி இந்த படத்தில் இருக்காது. 
எனது படம் மாதிரியே இருக்காது. எனது படங்களில் போலீஸ் வந்தது இல்லை. ஆனால் இந்த படத்தில் போலீஸ், கொலை, போதைபொருள், கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கும். இந்த காலகட்டத்தில் கதை இல்லாத படங்களே அதிகம் வருகின்றன. குடும்ப உறவுகள் இல்லை. மக்கள் ரசனையும் மாறுகிறது. எனவே நானும் வேறு மாதிரி படம் எடுக்க வந்து விட்டேன். அதற்காகவே டக்கு முக்கு டிக்கு தாளம் என்று பெயர் வைத்துள்ளேன். 

தங்கர் பச்சான்

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள எனது மகனுடன் மிள்ளனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனிஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டன்ட் செல்வா, மன்சூர் அலிகான், யோகிராமநாதன் ஆகியோர் வில்லன்களாக வருகிறார்கள். முழுக்க சென்னையில் நடக்கும் கதை. விஜித் கீழ் நிலையில் இருக்கிற குப்பத்து ஏழை இளைஞனாக வருகிறார். அவருக்கும் கோடி கோடியாய் சொத்து வைத்து வாழ பிடிக்காத முனிஷ்காந்துக்கும் பணம் எதை கற்றுத்தருகிறது என்பது கதை. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் இந்த படம் குறித்து தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இயக்குனராக உயர்ந்து நிற்கும் தங்கர் பச்சான் தொடர்ந்து தமிழ் மண் சார்ந்தும்,உறவுகளை குறித்தும்,தமிழ் கலாச்சாரத்தை பாதிக்காத வகையிலும் படங்களை இயக்கி வந்திருக்கிறார்.இந்நிலையில் தன்னுடைய மகனை அறிமுகப்படுத்தும் இந்த படம் அது போல இருக்காது என்று கூறியிருப்பதன் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Previous articleபாஜக அசுர வெற்றி காங் பாதாளத்தில்! கருத்து கணிப்பு முடிவுகள்
Next articleஎழுவர் விடுதலை தீர்மானம் ஆளுநரால் நிராகரிப்பா? தடைக்கல்லாக மாறினாரா சீமான்?