எழுவர் விடுதலை தீர்மானம் ஆளுநரால் நிராகரிப்பா? தடைக்கல்லாக மாறினாரா சீமான்?

0
88

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

சீமானின் பேச்சுக்கு பிறகு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு செய்திகள் இப்போது டாப். அந்த வழக்கில், கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.

அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில், தமிழக அரசு 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்த தீர்மானம் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை தொடர்பாக 2018ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. எனினும், ஆளுனர் எழுத்துப்பூர்வமாக தமது முடிவை தெரிவிக்க வில்லை. சில நாட்களில், மறுப்பு முடிவை வெளியிடலாம் என்று தெரிகிறது.

அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ராஜீவை கொன்றது நாங்கள்தான். இலங்கையில் எங்கள் இனத்தை அழித்ததால் அதை செய்தோம் என்று கூறியிருந்தார். அந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், ஆளுநரின் முடிவு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, விடுதலைக்கு தடையாக சீமான் இருந்து விட்டாரோ என்று  பேச்சுகள் எழத் தொடங்கி உள்ளன.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K