சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம்
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இளைஞர்கள் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து போலீசாரும் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றார்கள்.
திருச்சி மாநகர் ரயில்வே கேட்டின் பின்புறத்தில் போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த ஏழு பேர் கொண்டக் கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் போதை மாத்திரை விற்கும் கும்பல் எனத் தெரிந்தது அதனால் அந்த 7 பேரும் கைது செய்யப்பட்டனர்,மற்றும்அவர்களிடமிருந்து 470 மாத்திரைகள் 5 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய டூவீலர்யையும் போலீசார் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.
வரகனேரியைச் சேர்ந்த ராம்நாத்,என்னுரைச் சேர்ந்த நந்தகுமார், குமார், பாலாஜி, பிரகாஷ், குமரேசன், உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் இச்சம்பவதால் சிறப்பாகப் பாராட்டப்பட்டார்.
திருச்சி மாநகரில் உள்ள மருந்து கடைகளில் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் மற்றும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது ,அப்படி விற்பனை செய்தால் அந்த கடையின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும், என போலீஸ் கமிஷனர் அருண் தகவல் விடுத்துள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் தயாளனிடம் பேசியபோது சமீபகாலமாகவேத் திருச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்தி கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என தகவல் தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து, அவர் ஒரு டீமை நியமித்தார்.
அந்த டீம் கடந்த ஒரு சில மாதங்களாகவே விசாரணைச் செய்து ஒருவரை பிடித்தோம் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தான் மற்றவர்களை பிடித்தோம். அவர்கள் சரக்கு மற்றும் கஞ்சா விலை அதிகமாகிவிட்டது என்பதால் தான் மாத்திரைகள் குறிப்பிட்ட மருந்துகளைப் பயன்படுத்தி உள்ளார்கள். அந்த மருந்தை கணிசமான அளவு பயன்படுத்தினால் மட்டுமே அவை மருந்து.
இவர்கள் அதிக அளவில் அதனை தூளாக்கி வாட்டாரோடுக் கலந்து கை மற்றும் இடுப்பு பகுதியில் நீர் மூலமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அது கடுமையான போதை தரும் என்கிறார்கள் நாங்கள் பிடித்த 7 பேரும் 25 வயதுக்கு குறைவான இளைஞர்களே அவர்களிடம் விசாரணையில் சரக்கு மற்றும் கஞ்சா விலை அதிகமாக இருப்பதால் இது போன்ற மாத்திரை போன்ற விஷயங்களில் நாங்கள் ஈடுபட்டதாக சொல்கிறார்கள்.
இந்த மாதிரியான போதை செயல் உடம்பிற்கு மிகக் கெடுதல் ஆகவே இளைஞர்கள் இதனை மறந்து மீண்டுவெளியில் வர வேண்டும் போலீசார் என்று எச்சரித்தனர்.