முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ உங்களுக்கான 3 டிப்ஸ்!

0
85
Is there oil on the face? Here are 3 tips for you!
Is there oil on the face? Here are 3 tips for you!

முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ உங்களுக்கான 3 டிப்ஸ்!

நமது முகத்தில் எண்ணெய் சுரப்பதனால் நமது முகம் மிகவும் சாப்டாக காணப்படும். தேனீர் அதேநேரத்தில் எண்ணெய் வழியும் முகத்தில் தான் அதிகளவு முகப்பருக்களும் வரும்.முகம் எப்பொழுதும் எண்ணெய் வழிந்து கொண்டே இருப்பதால் அழுக்குகள் அனைத்தும் நேரடியாகவே கன்னத்தின் உள் சென்று வடுகின்றனது.அந்த அழுக்குகள் நாளடைவில் பருக்களாக மாறுகிறது.இந்த 3 டிப்ஸ்களை தொடர்ந்து செய்தாலே ஓரளவிற்காவது எண்ணெய் வழிவது கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

முதலாவதாக ஒரு முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்த முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஊற்றிக் கொண்ட பிறகு அதனுடன் இரண்டு ஸ்பூன் லெமன் சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.கலந்த பின்பு அதனை நம் முகத்தில் போட வேண்டும்.எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் உள்ளதால் அதிக அளவு எண்ணெய் வழிவது கட்டுப்படுத்தப்படும்.

அதற்கு அடுத்ததாக இரண்டு ஸ்பூன் ஓட்ஸை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.அதனை முகத்தில் தடவி 5 முதல் 10 நிமிடம் காய வைக்க வேண்டும்.முகத்தை கழுவுவதற்கு முன் நல்ல மசாஜ் செய்து 2 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.ஓட்ஸ் பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் உபயோகம் செய்யலாம்.இது நமது முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணையை’ எடுக்கும் திறன் உடையது.

மூன்றாவதாக கற்றாலையை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லை இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி தூங்க வேண்டும்.இந்தக் கற்றாழையின் ஜெல்லானது முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணையை எடுக்கக் கூடியது. அதுமட்டுமின்றி இது நல்ல மாய்ஸ்சுரைசர் ஆகவும் செயல்படும்.பொதுவாக எண்ணைய வழியும் முகம் உள்ளவரகுள் முகத்தில் அழுக்குகள் தனகாமல் இருக்க தண்ணீரில் அடிக்கடி முகம் அழும்ப வேண்டும்.அப்பொழுது அந்த அழுக்குகள் தங்கும் நிலை ஏற்படாது.