இந்தியாவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி!! மத்திய அரசு அதிரடி முடிவு!!

0
96

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனம் தன்னுடைய தடுப்பூசியை கொண்டு குழந்தைகள் மீது சோதனையை நிகழ்த்தியது. இந்த நிகழ்வு தற்போது முடிந்து விட்டது. மேலும் விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு நோய் பாதிப்பினை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டு உள்ளது.

மேலும், தற்போது வெளிநாட்டில் 31 கோடி நபர்களுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது. அதில் தடுப்புக்கான தேசிய திட்டத்தை மத்திய அரசு கடந்த மே மாதம் தொடங்கி விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜைடஸ் கெடிலா என்பது தொற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி விரைவில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடும் என்று மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி இந்தியாவில் மொத்தம் 28 ஆயிரம் பேரிடம் மூன்றாவது கிளினிகல் பரிசோதனையை மேற் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இது சட்ட ரீதியான அனுமதிகளுக்கு உட்பட்டது என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது அந்த தடுப்பூசி தலைமை மருந்து கட்டுப்பாடு அனுமதிக்காக காத்து இருப்பதாக கூறியுள்ளது. மத்திய அரசானது விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என்றும் கூறியுள்ளது. இந்த தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டபின் 28வது நாளில் இரண்டாவது டொஸும், 56 ஆவது நாளில் மூன்றாவது டொஸும் செலுத்த வேண்டும் என்று ஜைடஸ் கெடிலா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த தடுப்பூசி பரிசோதனை நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி அளித்துள்ளார் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous articleமீண்டும் உயர்ந்தது பெட்ரோல் விலை!! இந்த மாதத்தின் 10வது முறையாக இன்று விலை ஏற்றம்!! பெட்ரோல் டீசல் விலை இன்று!!
Next articleமுதல்வர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் மு.க.ஸ்டாலின்!! மக்களைக் கவர்ந்த முதல்வர் என பாராட்டு!!