சிறுத்தையின் பிடியில் இருந்து மகளை மீட்ட தாய்!! வனத்துறை அதிகாரிகள் பாராட்டு!!

0
121

மஹாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூர் மாவட்டம் மிகவும் வனப்பகுதி நிறைந்தது. மேலும், வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி குடியிருப்புகளும் இருக்கின்றன. இங்கு அடிக்கடி சிறுத்தைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வருவது உண்டு. மேலும், இந்த மாவட்டத்தில் ஜூனோன் என்கிற கிராமத்தில் வசிக்கும் அர்ச்சனா என்கிற பெண்ணிற்கு, ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறார். மேலும், அர்ச்சனா இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகிலுள்ள காட்டிற்கு சென்று உள்ளார்.

அவருடன் அவரது 5 வயது மகள் பிரஜக்தா சென்று இருக்கிறார். வீட்டில் இரு என்று சொன்னதையும் கேட்காமல் கூட சென்று உள்ளார் பிரஜக்தா. மேலும், வனப்பகுதிக்கு அருகில் சென்றதும் அர்ச்சனா அடர்ந்த மரங்கள் இருக்கும் பகுதிக்குள் சென்று விட்டார். அந்த நேரம் சிறுமி பிரஜக்தா ‘அம்மா அம்மா’ என சத்தம் போட்டு அழுது இருக்கிறாள். என்ன ஆனதோ என்று அர்ச்சனா ஓடிவந்து பார்த்தபோது சிறுத்தை ஒன்று பிரஜக்தா பின் கழுத்துப் பகுதியை பிடித்து தூக்கிக் கொண்டு செல்ல முயன்று உள்ளது.

நொடியும் தாமதிக்காது அர்ச்சனா, அங்கு கிடந்த ஒரு கம்பை எடுத்து சிறுத்தையின் வாய்ப்பகுதியில் அடிக்க ஆரம்பித்துள்ளார். அப்படியும் தன் பிடியிலிருந்து சிறுமியை முழுமையாக அந்த சிறுத்தை விடவில்லை. மேலும் ஒரு பெரிய கம்பை எடுத்து சிறுத்தையை அர்ச்சனா வேகமாக தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த சிறுத்தை சிறுமியை விட்டுவிட்டு அர்ச்சனா மீது பாய ஆரம்பித்துள்ளது. அர்ச்சனா தன்னிடமிருந்த கம்பு கொண்டு சிறுத்தை தொடர்ந்து போராடியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுத்தை இரண்டு பேரையும் விட்டு விட்டு காட்டுக்குள் ஓடிவிட்டது.

ஆனால், அது சிறுத்தையா, புலியா என்று அர்ச்சனாவிற்கு தெரியவில்லை. அவர் சொன்ன அடையாளங்களை வைத்து பார்க்கும்போது அது சிறுத்தையாக தான் இருக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். அர்ச்சனாவிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரிகள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். மேலும், சிறுத்தையுடன் போராடி மகளை மீட்க பெண்ணை வனத்துறை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

சிறுமிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் இதுகுறித்துக் கூறுகையில், ’21 ஆண்டு கால மருத்துவ சேவையில் சிறுத்தைகள் பிடியில் இருந்து உயிர் தப்பியது கிடையாது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார் என்றும் சிறுத்தை தனது முழு பலத்தையும் பயன்படுத்தி சிறுமியை பிடிக்காமல் ஒரு குட்டியைப் பிடிப்பது போன்று தான் பிடித்து உள்ளது என்றும் கூறியுள்ளார். அதனால்தான் காயத்தின் தன்மை பெரிதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்’.

Previous articleபிளாக் அண்ட் வொயிட்டா இருந்தாலும் போட்டோல கவர்ச்சி குறையல!! ரம்யா பாண்டியனின் கிளாமர் போட்டோ!!
Next articleமற்ற ஹீரோயின்களை ஓரங்கட்டி., முதலிடம் பிடித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்!!