10ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு அறிய வேலைவாய்ப்பு!! 6000 முதல் 8000 வரை சம்பளம்!!

Photo of author

By Jayachithra

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் வழியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பாடத்திட்டங்களில் கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இப் பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் 6000 முதல் அதிகபட்சம் 8000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரீசியன் பணிகளுக்கு மொத்தம் 100 காலியிடங்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள பக்கத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link :Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)