ஓம் வடிவில் இருக்கின்ற அதிசய கோவில்!

0
72

மத்திய பிரதேசத்தில் இருந்து 281 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது ஓங்காரம் இங்கே ஓங்காரேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார் எனவும் இவரை அழைக்கிறார்கள். இது மலைமுகட்டில் இருக்கின்ற சுயம்பு லிங்கமாகும். இந்த தளத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு தினமும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டதாக சொல்லப்படுகிறது. அது தான் சாளக்கிராம கற்களாக மாறியதாக சொல்லப்படுகிறது.

இங்கே ஜோதிர்லிங்கம் தோன்றுவதற்கு காரணமான விந்தியமலை முதலில் ஓங்கார வடிவில் மண்ணால் பீடம் அமைத்து அதில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்ததாக இந்த தளம் ஓங்காரம் என்று பெயர் பெற்றது. அதோடு ஒரு காரணமும் தெரிவிக்கிறார்கள். நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து மறுபடியும் ஒன்று கூடி ஓங்காரத்தில் வரிவடிவம் போல காட்சி தருவதால் இந்த தளம் ஓங்காரம் என்று பெயர் பெற்றது எனவும், சொல்கிறார்கள். கோவில் மூன்று அடுக்குகளாக இருக்கிறது. முதல் தளத்தில் ஓங்காரேஸ்வரர் நடுப்பகுதியில் மகாகாளர் மற்றும் மூன்றாவது பகுதியில் சித்தீஸ்வரரும் இருக்கிறார்கள். மூலஸ்தானத்தில் இருக்கின்ற ஓங்காரேஸ்வரர் மீது கீழே இரு பனைமர ஆழத்தில் இருக்கின்ற நர்மதை நதியின் நீர் மேலே வந்து தானே அபிஷேகம் செய்கிறது.

சிவபெருமானை வழிபட்ட தலம் ஓங்காரேஸ்வரர் யாக வேள்விகள் உடன் மூன்று கடவுள்களையும் மகிழ்வித்த மாந்தாதா பதிலுக்கு பெற்றது சிவபெருமானின் இந்த ஓங்கார லிங்கத்துடன் தானும் வாசம் செய்ய வேண்டும் என்பதுதான். ஓங்கார மாந்தாதா என்றே இந்த சிறு குன்று இன்று வரையில் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த குன்றை சிரத்தையுடன் பக்தர்கள் வலம் வருகிறார்கள். பரிக்ரமா என்ற கிரிபே தர்சன வழியில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பல இருக்கின்றன. ஓங்காரேஸ்வரர் நர்மதையின் இருக்கின்ற தீர்த்தங்கள் எல்லாவற்றிலும் அதிக புனித முக்கியத்துவம் பெற்றது. ஓங்காரேஸ்வரர் தீர்த்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் எப்போதும் உறைந்திருக்கும் தலம் இது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.