பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது மகளுடன் யார் படத்தை பார்த்தாங்கனு தெரியுமா?? உலக அளவில் பேமஸ் ஆன நடிகர்!!

0
106
Do you know who famous cricketer Raina is watching the movie with her daughter? World famous actor !!
Do you know who famous cricketer Raina is watching the movie with her daughter? World famous actor !!

பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது மகளுடன் யார் படத்தை பார்த்தாங்கனு தெரியுமா?? உலக அளவில் பேமஸ் ஆன நடிகர்!!

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை இவரின் ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வருகின்றார்கள். இளையதளபதி விஜய் அவர்கள் இதுவரை தமிழ் சினிமாவில் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிக்கும் அனைத்து படமுமே இவரது ரசிகர்களால் போற்றப்படும். மேலும் இவரின் அனைத்து படமுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் அண்மையில் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக அளவு வசூலை பெற்றது.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருமான குட்டி தல ரெய்னா அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்தும் பேசி இருந்தார்.

அதில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட மாஸ்டர் திரைப்படம் மிகவும் நன்றாக உள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் அவர் ஒரு சிறந்த நடிகர். மாஸ்டர் திரைப்படத்தை நானும் எனது மகளும் டிவியில் பார்த்தோம். அந்த படம் என் மகளுக்கும் பிடித்திருந்தது என்று தெரிவித்துள்ளார்.