குழந்தைக்கு திருஸ்டி படாமல் இருக்க இதை செய்யுங்கள்!! குழந்தை நலமாக இருக்கும்!!

Photo of author

By Jayachithra

குழந்தைக்கு திருஸ்டி படாமல் இருக்க இதை செய்யுங்கள்!! குழந்தை நலமாக இருக்கும்!!

Jayachithra

குழந்தைகளுக்கு பொதுவாக திருஷ்டி சுற்றி போட பல முறைகள் உள்ளன. ஆனால் கீழ்க்கண்ட முறைகளை பெரியோர்கள் அந்த காலத்திலிருந்து கடைப்பிடித்து வருகின்றனர். அதனை பற்றி தற்போது காணலாம்.

முதலில் ஒரு கைப்பிடி உப்பு எடுத்துக் கொண்டு, கையை நன்றாக மூடி தாயின் மடியில் அமர்ந்து இருக்கும் குழந்தையை இடமிருந்து வலமாக மூன்று தடவையும், வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி, அவ்வாறு குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி, உப்பை தண்ணீரில் போட வேண்டும். தண்ணீரில் உப்பு கரைந்து விட்டால் திருஸ்டி போய் விடும் என்பது நம்பிக்கை. இது முறை பல கிராமங்களிலும் இன்னும் பின்பற்றப்படுகிறது.

மேலும், குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஸ்டி பட்டு அதனால் சாப்பிடாமல் மெலிந்து போக வாய்ப்பு உண்டு. அப்பொழுது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்பான் குச்சியை கொளுத்தி திருஷ்டி சுற்றி போட வேண்டும். அவ்வாறு சுற்றி போட்டால் திஷ்டி போய்விடுவது மட்டுமில்லாமல், குழந்தையும் நன்றாக சாப்பிடும்.

மேலும் திருஸ்டி தாக்கத்தால் குழந்தையானது கீழே விழுந்து அடிக்கடி அடி பட்டுக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக குழந்தையைக் கீழே விழும் சமயங்கள், நீங்கள் அங்கு இருந்தால் கீழே கிடக்கும் செங்கல் துண்டை குழந்தையின் தலையை மூன்று முறை சுற்றி தூக்கி போட்டு உடைத்து குழந்தையிடம் உள்ள திருஷ்டி கழிக்கலாம்.

கொஞ்சம் பெரிதான குழந்தையை சோறு ஊட்டிய பின் தட்டில் மிச்சம் இருக்கும் சாப்பாட்டில், குழந்தையை கையை கழுவ வைத்து அதனைச் சுற்றி போடலாம். சாப்பிடப் போகும் முன்பு ஒரு உருண்டை சாதத்தை தட்டில் ஓரமாக எடுத்து அந்த உணவை காகத்திற்கு போட சொல்லுங்கள். அது ஒரு பரிகாரம் இதன் மூலமாக அனைத்து விதமான நல்ல விளைவுகளும் நேரும் மற்றும் திருஷ்டியும் விலகும்.

மேலும் கடுகு, உப்பு, மிளகாய் சிறிது தேன் தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து திருஸ்டி சுத்தி போடலாம் மேலும் அதனை ‘ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்க் கண்ணு, நல்ல கண்ண, நொல்ல கண்ணு, அந்த கண்ணு இந்த கண்ணு, எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும், கடுகு போல வெடிக்கட்டும்’, என்று சொல்லி சுத்திப் போட வேண்டும்.

இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள் இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே தான். இவ்வாறு குழந்தைகளுக்கு தொடர்ந்து திருஸ்டி சுத்தி போடலாம். சாஸ்திரங்களின் அடிப்படையில் குழந்தை தூங்கும்போது, திருஷ்டி கழிப்பது மகா பாவமாக இருக்கும். அதை மட்டும் எப்பொழுதும் செய்யாதீர்கள்.

அப்படியாக செய்யும்பட்சத்தில் எதிர்மறை விளைவுகளை கூட தந்துவிடும். தூங்கும் குழந்தைக்கு எப்போது நம் திருஷ்டி சுத்தி போடுவது, குளிக்க வைப்பது, அலங்காரம் செய்து அழகு பார்ப்பது எல்லாம் குழந்தை விழித்திருக்கும் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும்.