கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

0
53

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.

ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினை குறைப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் போன்ற முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அதனை அடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாது இருந்தாலும், தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கிராமப்புறங்களில் தடுப்பூசி போடாதவர்கள் அதிகம் இருக்கும் காரணத்தினால், தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சி அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் தடுப்பூசி போட்ட சான்றிதழையும் காண்பிக்க வேண்டும்.

இல்லையென்றால் 100 நாள் வேலை திட்டம் கிடையாது என்று கூறியிருக்கின்றனர். இதனை தொடர்ந்து கிராம மக்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். மேலும் தடுப்பூசி போடாத கிராம மக்களும் போட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.