இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!!

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!!

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் வழக்குகளை விசாரிப்பதற்கு மிகவும் தீவிரம் காட்டி இருக்கின்றது. மேலும் இந்த நிலையில் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே முடிக்காமல் இருக்கும் முக்கியமான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும், தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தீவிரம் காட்ட படுவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த முக்கிய ஆதாரங்களை திரட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு ஏற்கனவே சதீஷ், சபரிராஜன், திருநாவுக்கரசு மற்றும் வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வலுவான ஆதாரங்கள் சிக்காத காரணத்தினால் 5 பேர் மீதான குண்டர் சட்டம் நீக்கப்பட்டு இருந்தது.

அதனை அப்போது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே முக்கிய ஆதாரங்களை திரட்டி வரும் தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது அவரை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதனை அடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், மனோஜ், கனகராஜ் மற்றும் சயான் போன்ற 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார். மேலும் சயோனும் மனோஜும் ஜாமினில் வெளியே வந்து இருக்கின்றனர். இவர்கள் இருவரிடமும் அதிமுக முக்கிய புள்ளிகள் குறித்து வாக்குமூலம் பெரும் வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு வழக்கிலும் அதிமுக தலைகள் எல்லாம் மாட்டலாம் மற்றும் மாற்றங்கள் நடத்தலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Leave a Comment