கோலாகலமாக நடந்த சங்கர நாராயணசாமி ஆடிதபசு விழா!

0
84

சங்கரன் கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா சென்ற 13ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழா தினங்களில் அந்தந்த மண்டகப்படியில் சுவாமி அம்பாளுக்கு பூஜைகள் நடத்தாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் உள்ளேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் அந்தந்த மண்டகப்படி தாரர்கள் மட்டும் 50 பேர் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்படுகிறது.

விழாவின் சிகர நாளான ஆடி தபசு திருவிழா இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. வழக்கமாக தெற்கு ரத வீதியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இடையில் நடைபெறும் ஆடி தபசு காட்சி தற்சமயம் கோவிலுக்கு உள்ளேயே எளிமையான முறையில் நடத்தப்பட இருக்கிறது.என்ற மாலை 6 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி தருகின்றார். அதன் பின்னர் இரவு 8 மணி அளவில் யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சி தருகின்றார்.

இந்த நிகழ்வில் இரண்டு மண்டகப்படி சமுதாயத்தைச் சார்ந்த 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை விழா நிகழ்ச்சிகள் எல்லாம் கோவில் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விழாவை முன்னிட்டு மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கலிவரதன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.