ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

0
86

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

இசை நிகழ்ச்சியில் தோல்வி அடைந்ததாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது.

சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி இருக்கின்றார். மேலும், அந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என நிகழ்ச்சி நடத்தியதால் நஷ்டம் ஏற்பட்டதால் மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை தனியார் நிறுவனங்களுக்கு விற்று லாபம் அடைந்து விட்டதாகவும், மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மேலும், நிகழ்ச்சி நடத்திய காரணத்தால் நஷ்டம் ஏற்பட்டதற்கு பொறுப்பாக முடியாது என்றும் நிகழ்ச்சிக்காக பேசிய தொகையை கூட மனுதாரர் தராமல் போலியாக இழப்பீடு கேட்டு உள்ளார் என்றும் தெரிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களுக்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கு தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், இதன் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் ரசிகர்கள் மிகவும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். இதனையடுத்து துபாயில் நடத்திய நிகழ்ச்சிக்கும் ஏ.ஆர்.ரகுமான் என்ன சம்பந்தம் இதற்காக யாராவது கேஸ் போடுவாங்களா? என்று கூறி வருகின்றனர்.