குட்நியூஸ்: நியாயவிலைக்கடைகளில் மக்களுக்கு 4000 ரூபாய்!! தமிழக அரசு அதிரடி!!

0
139

குட்நியூஸ்: நியாயவிலைக்கடைகளில் மக்களுக்கு 4000 ரூபாய்!! தமிழக அரசு அதிரடி!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர்.

அதன் பின் வைரஸை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா வைரஸின் இரண்டாவது தாக்கம் கட்டுக்குள் வந்தது.

இதனை தொடர்ந்து கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அத்துடன் 2000 ரூபாய் இரண்டு தவணைகளாக பிரித்து மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா நிவாரணம் 4000 பெறாதவர்கள் ஆகஸ்ட் 1முதல் நியாயவிலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. அதன்படி ஜூலை 31-க்குள் கொரோனா நிவாரண நிதி பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1முதல் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

Previous articleமருத்துவர் ராமதாஸுக்கு 83 வது பிறந்த நாள்! பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து 
Next articleதங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!