இபிஎஸ் ஒபிஎஸ் டெல்லிப்பயணம்! பொதுச்செயலாளர் ஆகிறாரா சசிகலா!

0
128

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் நேற்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு கோயம்புத்தூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று ஓபிஎஸ் ,இபிஎஸ் உள்ளிட்ட இருவரும் டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் , பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்டோரை சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று டெல்லிக்கு சென்ற ஓபிஎஸ் தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் முன்னாள் பாஜகவின் தலைவர் முருகனை சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு எடப்பாடி பழனிச்சாமி மதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கொறடாவுமான எஸ் பி வேலுமணி கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரைடு நடத்துவதில் இறங்கியிருக்கிறது. இதனால் அதிமுக கவலை அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.அத்துடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீட்டில் ரைடு நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான் சசிகலாவும் தன்னுடைய அதிரடிகளை ஆரம்பித்திருக்கிறார். ஆடிமாதம் முடிவதற்க்காகவும்,அரசின் முழு ஊரடங்கு முடிவதற்க்காகவும், காத்திருக்கும் சசிகலா தொலைபேசியில் உரையாடுவது, மற்றும் சேனல்களுக்கு சிறப்பு பேட்டி அளித்து வருகிறார். அதில் ஜெயா டிவிக்கு கொடுத்த பேட்டியில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு என்னையே பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்வதற்காக தான் அவர் அவைத்தலைவர் மதுசூதனன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் இருவரும் அடுத்தடுத்து டெல்லிக்கு சென்று இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதிமுக ஆளும் கட்சியாக இருந்த சமயத்தில் அந்த கட்சியின் உள்கட்சி பிரச்சனைகளில் கவனம் செலுத்திய அளவிற்கு இப்போது ஆர்வம் செலுத்த பாரதிய ஜனதா கட்சி தயாராக இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக தான் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தொடர்ச்சியாக டெல்லி மேலிடத்தில் முறையிட்டு வந்திருக்கின்றார். அதிமுகவில் சசிகலாவின் ஆதிக்கம் தொடர்ந்து இருப்பது தொடர்பாக அவர் டெல்லிக்கு தகவல் தெரிவித்து வந்திருக்கின்றார். இதன் அடிப்படையில்தான் தமிழக பிரச்சினைகளுக்காக டெல்லியில் பேசுவதுபோல சென்று அதிமுக உட்கட்சி பிரச்சனையை எடுத்துரைக்க இருக்கிறார்களோ என்று அதிமுக நிர்வாகிகள் இடம் பேச்சு அடிபட்டு வருகிறது.சசிகலா ஆதரவாளர்கள் ஒருபுறம் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மற்றும் வயது காரணமாக, அவதியுற்று வருகிறார். அதனால் அவருடைய பதவியை மற்றொருவருக்கு இப்போது மாற்றி தர வேண்டியது அவசியம் என்று அதிமுகவின் பொது குழுவோ அல்லது செயற்குழு கூட்ட வேண்டும் என்றால் அவைத்தலைவர் தான் கூட்ட வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.

சசிகலா பல தொண்டர்களிடம் தொலைபேசி மூலமாக உரையாற்றியபோது அதிமுகவில் எல்லோரும் சமம் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் அம்மாவை கூட பலர் கருத்து வேறுபாடு காரணமாக, வசைபாடி இருக்கிறார்கள். ஆனாலும் அம்மா அவர்களையும் சேர்த்துக் கொண்டார் என்றெல்லாம் தெரிவித்து இருக்கிறார்கள் ஒரு சில நிர்வாகிகள் எடப்பாடியை சிறையில் தள்ள வேண்டும் என்ற சமயத்தில் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்றும் அவர் கண்டித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.சசிகலா தற்சமயம் எடப்பாடி பழனிச்சாமி பழிவாங்கும் மனநிலையில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இப்போதிருக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைந்து செயல்பட்டால் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது கை வைக்க தயங்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே ஓபிஎஸ் அவைத்தலைவர், எடப்பாடி பழனிச்சாமி பொருளாளர், சசிகலா பொதுச்செயலாளர் என்ற ஒரு நிலையை நோக்கி அதிமுக நகர்த்தபடுவதாக தகவல் கிடைக்கின்றன. இருந்தாலும் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் டெல்லிக்கு அழைக்கப்பட்டதை போல எங்களுடைய தரப்பில் யாரும் அழைக்கப்படவில்லை. ஆகவே என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருந்து வருகிறார். இருந்தாலும் சசிகலா அமைதியாக இருக்கிறார் அவருக்கு ஒரு சில சமிக்கைகள் கிடைக்காமல் இவ்வளவு விரிவான பேட்டிகளை அவர் கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

Previous articleபங்கு சந்தியில் இன்று!! வங்கி மற்றும் நிதிப் பங்குகள்  மோசமான நிலையை அடைந்தது!! VIX  4% உயர்ந்தது!!
Next articleபுது எழுச்சி பெற்ற டிடிவி தினகரன்! அறிவிக்கப்பட்ட போராட்டம்!