அச்சோ… நடிகை யாஷிகாவின் நிலைமை?!! இரண்டு மாசமாகும்…அவரது தாய் வெளியிட்ட தகவல்!!
தமிழ் சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நடிகை யாசிகா ஆனந்த் ஆவார். யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின், இவருக்கு எந்த விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அத்துடன் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டும் கிடைத்தது.
இந்த நிலையில், இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மாமல்லபுரம்-புதுச்சேரி ஈசிஆர் சாலையில் இரவு அதிவேகமாக காரை யாஷிகா இயக்கியுள்ளார்.
இரவு 11:45 மணி அளவில் சூலேரிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் உள்ள பேரிக்கேடில் மோதி கார் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கமாக சென்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதனை தொடர்ந்து கார் பலத்த சேதமடைந்தது. அத்துடன் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பவானி ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். காரை ஓட்டி வந்த யாஷிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின் இருக்கையில் அமர்ந்து இருந்த ஆண்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருடைய தலை காயம் அடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனை குறித்து அவருடைய தாயார் சோனல் ஆனந்த் வெளியிட்டுள்ள தகவலில், யாஷிகாவுக்கு இடுப்பு, கை, கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கின்றது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தோழி பவானி குறித்து கேட்டபோது, அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு உள்ளதாக யாஷிகாவிடம் கூறியுள்ளோம். இரண்டு மாதம் கழித்து தான் அவரால் நடக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக யாஷிகா ஆனந்த் மீது அதிவேகமாக கார் இயக்கியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், யாஷிகாவின் ஓட்டுனர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டது.